தீக்குளிக்கும் தியாகிகள்

0
559
The Glass Slipper

கனத்தெரியும் செந்தீயில்
குளித்தெழுந்தாலும்….
தங்கத்துக்கு மட்டும் ஏனோ
தீக்காயங்கள் குறைவதேயில்லை!

சுரங்கம் தோண்டி புதையல்
தேடும் ஆர்வமாய்
மனதைத் தோண்டி
முள்முள்ளாய்த் தைக்கின்றன
தத்துவ நெருஞ்சிகள்…


இயல்பாய் தான் அளித்த
வாக்குமூலங்கள்
முனை முறிந்த
தராசில் நிறுக்கப்பட்டு
அனல்வாரி இறைக்க……

சிரசில் அணிந்த
நெருப்புக்கீரிடமாய்
நின்று எரிகிறது
தாகம் தணித்த நீர்வெளி,
பாறையாய் இறுகி
தன் புதைவை
சிறையிலடைக்குது
கல்பீடமென…!!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க