loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil kavithaihal

குறிச்சொல்: tamil kavithaihal

என் வீட்டுத் தோட்டத்தில்…!

நான் அதிகளவு நேசிப்பது விதவைப் பூக்களைத்தான்! அதனாலென்னவோ மொட்டுக்கள் என் முற்றத்தில் இன்னும் பூப்பெய்தவில்லை... கன்னிப் பூக்கள் கலர் கலராக தன்னை அலங்கரித்த போதிலும் அவ்வப்போது தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை நானறிவேன்! பட்டாம் பூச்சியென் வாசல் வந்தாலும் தேன்சிட்டு எனைத் தேடி நுகர்ந்தாலும் என் விதவைப் பூக்கள் ஒருகாலும் முகத்திரை அவிழ்த்ததில்லை... அவை எனக்கே சொந்தமென்பதை அவைகள் மறந்தது கூட இல்லை இருப்பினும்...

உன்னால் மாத்திமே உன்னை திருத்தமுடியும்

உன் எண்ணங்கள் மாசு படிந்தவை.. உன் முகம் வேஷம் தரித்தது... உன் உதடு பொய்களை மாத்திரமே உச்சரிக்கப் பழகியது... உன் மனம் அழுக்குகளை ஆதரிக்கிறது... உன் புத்தி ஏமாற்று என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது உன் செயல்கள் ஏமாற்றக் கற்றுக்...

ந ட் பு

          நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம் எனும்கொடிய அரக்கனைஉள்ளே விட கூடாதுஅவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்....!!! நீ தடுமாறி கீழே விழும்முன் உன்னை தாங்கி...

தமிழால் தமிழ் வளர்ப்போம்…

0
தமிழால் தமிழ் வளர்ப்போம் என்ற முதன்மை நோக்கில் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் தமது எண்ணங்களை படைப்புக்களாக கதை, கவிதை, கட்டுரைகள், மின்நூல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகள்,...

~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~

0
வானிலிருந்து எது விழுந்தாலும், எம் கோழிகள் நனைந்த செத்தையில் கரையான்களைக் கொத்திக் கொண்டிருக்கும் தன் குஞ்சுகளையும், சென்ற போரில் தாயை இழந்த குழந்தைகளையும் இழுத்து இறக்கைக்குள் காத்துக்கொள்ளும்.. சில நேரங்களில் குஞ்சுகளின் குரூர அலகிலிருந்து தப்பிய கரையான்களுக்கு வானிலிருந்து குண்டுகள் மூலம் மரணம் அருளப்படும்! சிலநாட்கள் கழித்து இடிபாடுகளுக்குள் கரையான்கள் கோழிக்குஞ்சுகளின் இரத்தம் தோய்ந்த சிதறிய கண்களை வெறியுடன் பழிதீர்க்கும்! கரையான்களுடன் எந்த...

சுய இரங்கற்பா

2
தன்னைத்தானே வாசித்துக்கொள்ளும் ஒரு வயலின் சிற்பம் கண்டேன் தனிமையின் அகாலத்தில் என்னுடன் நான் பேசிக் கொள்வது போல் எனக்கு நானே ஜோக்குகள் சொல்லிக்கொள்வது போல் என்னைப்பார்த்து நானே புன்னகைத்துக் கொள்வது போல் என் தோளில் நானே விழுந்து உடைந்து அழுவது போல் எனக்கு...

கனவு

2
நித்தம் உந்தன் நினைவு இருள் கண்டும் கலையா கனவு உன்னை சந்திக்க விரும்பும் உறவு என்னைப் பற்றி என்ன எண்ணுகிறாய் கூறு நித்திரை இல்லையடி என்னுள் சுவர்க்கமாய் நீயடி உலகம் அமைதி கொண்டதும் என் கனாவில் வந்து போனதும் நீ என்பதை அறியவில்லை நானடி விடியாத...

சாளரம்

0
புதிதாய் பூத்ததொரு சாளரம் ஏன் இத்தனை பிம்பங்கள் பிரம்மையாகக் கூட இருக்கலாம் இல்லை இது என்னறைதான் சூரியனைக் காணவில்லை வெண்பனி ஓயவில்லை இடைக்கிடை சிறு சலனம் திடீரென மௌனம் மீண்டும் பார்க்கிறேன் தூரமாக அதே மரங்கள் சிறகு விரிக்கும் பட்ஷிகள் ஆனால் ஒரு பாதை தானே சகதியின் மேலாக இருகிச் செல்லும்...

அன்பின் ஏக்கம்

உறவுகள் பல இருந்தும் கூட தனிமரமாக தவிக்கிறேன். எல்லா உறவுகளும் என்னை விட்டு விலகினாவிலகினால் நான் எங்கு செல்வேன் என்ன செய்வேன். பணம் இருந்தால் தான் மதிப்பு என்றால்..... ஏன் யாரும் அன்பான என் உள்ளத்தை புரிந்து...

அண்ணன்

6
      தோழமையோடு தோள் கொடுத்தான், நான் துவண்டெழும் பொழுது...  வல்லமையோடு வலிமை கொடுத்தான், நான் வீழ்ந்தெழும் பொழுது...  பரிவோடு பாசம் கொடுத்தான், தனிமையில் நான் தவிக்கும் பொழுது..  அன்போடு அரவனைத்தான், என் மனம் உருகும் பொழுது....  போர்வையாக எனை அரவனைத்தான், குளிரில் நான் நடுங்கிய பொழுது,  நண்பனாக நன்னெறிகள் தந்தான், நான் பாதை தவறிய பொழுது,  தந்தையாக அறிவுரை தந்தான், தவறுகள் நான் செய்த பொழுது,  அன்னையாக ஆறுதல் தந்தான், கண்ணீரில் நான் கலங்கிய பொழுது,  சண்டைகள் பல வந்தாலும், அன்பின் ஆழம் குறைவதில்லை,  பந்தங்கள்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!