கல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்

 

 

 

 

நீர்மை வலைத்தளமானது எழுத்தாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் புதிய வளரும் எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கவும் அவர்களின் கற்பனைத் திறன்களை மேம்படுத்தவும் என 2019 இல் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக தனது பணியினை செய்து வருகின்றது. இதில் வயது வரம்பின்றி ஆர்வமுள்ள எந்த ஒரு படைப்பாளரும் எந்த ஒரு பிர(பிற)தேதசத்திலிருந்தும் தனக்கென ஒரு தனி பிரத்தியேகமான கணக்கினை உருவாக்கி தனது படைப்புக்களை பதிவிட்டுக் கொள்ள முடியும். அந்த வகையில் நீர்மை வலைத்தளம் தற்போது வரை 100இற்கு மேற்பட்ட படைப்பாளர்களை கொண்டு இயங்கி வருகின்றது. எழுத்தாளர்களை ஊக்குவிக்க போட்டிகளையும் மாதாந்தம் நீர்மை வலைத்தளம் நடாத்தி வருகின்றது. தினமும் பதிவிடும் கதை, கவிதை, கட்டுரை, ஆய்வுகள், சுகாதார, சமையல், அழகு குறிப்புகள், கல்வி தொடர்பிலான வீடியோக்கள், பொது அறிவை துளிர்க்கச் செய்யும் சுவாரஷ்யமான தகவல்கள் என படைப்பாளர்கள் பதிவிடும் படைப்புகளின் மூலம் பல்லாயிர வாசகர்கள் பயன் பெறுகின்றனர். 

மேலும் அடுத்தகட்டமாக சமூக நலன்கருதி நீர்மை பவ்ன்டேஷன் எனும் பெயரில் இறைவனதும் கொடையாளர்களினதும் உதவியின் மூலம் சில குறிப்பிடக்கூடிய செயற்பாடுகளை ஆரம்பகட்டமாக 2020ம் ஆண்டு ஜுலை மாதம் முதல் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது. மாணவர்களின் கற்றலுக்கான மாதாந்த உதவித்தொகை மற்றும் விஷேட தேவையுடையோர்களுக்கான உதவிகள், தேவையுடையோருக்கான உலர் பொதிகள் என நீர்மை பவ்ன்டேஷன் உதவிகளைசெய்துவருகின்றது (பெயர், புகைப்படங்கள் பிரசுரித்து விளம்பரப்படுத்தும் நோக்கம் தவிர்த்தே விபரங்கள் எதுவும் பதிவிடவில்லை).

தற்போது மாணவர்களுக்கான இலவச ஆன்லைன் கல்வி வகுப்புகளை நடாத்துவதற்கு நீர்மை பவ்ன்டேஷன் (Neermai Foundation) அமைப்பு தீர்மானித்துள்ளது. இதில் சிறந்த வளவாளர்களான ஆசிரியர்களின் வழிகாட்டல் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதே நீர்மை பவ்ன்டேஷனின் (Neermai Foundation) நோக்கமாகும். 

அந்தவகையில் ஒன்லைன் மூலம் பின்வரும் பாடநெறிகள் ஆரம்பகட்டமாக எதிர்வரும் 20ம் திகதி முதல் ஆரம்பித்து இலவசமாக நடாத்தப்படவுள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே காணப்படும் படிவத்தை பூர்த்தி செய்து வகுப்புகளில் இணைந்து கொள்ள முடியும். மூன்றாந்தவணை கல்வியாண்டுடன் சேர்த்து கடந்தகால வினாபத்திரங்கள் மற்றும் பயிற்சித் தொகுப்புகளும் ஒன்லைன் மூலம் இடம்பெறும். வாய்ப்பினைத்தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டல்களுடன் அறிவினை வளர்த்துக் கொள்ளுங்கள்!

*விரைவில் ஏனைய பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படும்

நீங்கள் ஒன்லைன் மூலம் மாணவர்களுக்கு திறமையாக கற்பிக்கக் கூடிய ஆசிரியர் எனில் இந்த இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள் Click here

இப்பொழுதே மாணவர்கள் இந்த இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள் Click here

இது முற்றுமுழுதாக இலவசக்கல்வியை நாடும் வறிய மாணவர்களால் ஒன்லைனில் கற்றலை தொடர மேலதிக பணம் செலவழிப்பதை தவிர்க்கும் நோக்கத்திலேயே அவர்களுக்கு இலவசமாக இணைவதற்கு வசதி வழங்கியுள்ளோம். தனித்தனியாக அடையாளப்படுத்தாது முழு மாணவர்களுக்கும் இலவசமாக வழங்குவதன் மூலம் கல்வி அனைவரையும் சென்றடையும் என நம்புகின்றோம்.

உங்களால் உண்மையிலேயே கற்றலுக்கான தொகையினை செலுத்தக் கூடிய இயலுமை இருந்தால் தயவுசெய்து உங்கள் உதவிகளை குறைந்த தொகையாக இருப்பினும் இத்திட்டத்தற்கு உதவி பங்களித்திடுங்கள். இதன் மூலமே எங்களால் அதிக பாடங்களை மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசியர்களை தயார்படுத்த முடியும். இது நீர்மை வலைத்தளத்தின் சிறிய வேண்டுகோள் மாத்திரமே! உங்களது பங்களிப்பினை எங்களுக்கு 0762660466 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துங்கள்.


Scheduled online classes

Monday

Grade – 06 – History

Meeting is not found or has expired.

Tuesday

Grade – 07 – History

Meeting is not found or has expired.

Grade – 10 – ICT

Meeting is not found or has expired.

Wednesday

Grade – 11 – Tamil

Meeting is not found or has expired.

Grade – 8 – History

Meeting is not found or has expired.

Grade – A/L – ICT

Meeting is not found or has expired.

Thursday

Grade – 09 – History

Meeting is not found or has expired.

Grade – 11 – ICT

Meeting is not found or has expired.

Friday

Grade – 10 – History

Meeting is not found or has expired.

Grade – 06 – English

Meeting is not found or has expired.

Saturday

Grade – 09 – English

Meeting is not found or has expired.

Sunday

Grade – 07 – Tamil

Meeting is not found or has expired.

Grade – A/L – English

Meeting is not found or has expired.