உதிர்ந்து விழுந்தது பூ ஒன்று!!

0
720
20200523_170124

தாய் எனும் சுடர்  அணைந்ததிலிருந்து
தன்னையே அர்ப்பணித்து
தனக்காய் ஏதுமின்றி-என்னை
தன்மகளாய் வளர்தெடுத்தாயே -என் மூத்தம்மா!!

துன்பங்கள் பல வந்த போதும்
துணையாய் நின்று கொண்டாய்-நீ
ஆறுதல்கள் பல கூறி-அன்பால்
என்னை அரவணைப்பாய்..

ஓலைக்கிடுகில் வேலியும்
இடை இடையே பூவரசமும்
காண்பதற்கே அழகு சொக்கும்-பார்ப்போர்
கண்குளிர  பார்த்து நிற்கும்..

கரும்பின் சுவையை விடவும்
பாலின் தூய்மையை விடவும்-என்
இதயத்தை என்றும்  இனிக்க
வைக்கும் உன் வெட்கச்சிரிப்பு!

ஆயிரம் ஆயிரம் மலர்களும்
உன்னிடம் வந்தால் தோற்கும்
இத்தனை காலமும் வாடாத
இளமை அழகு இங்குண்டு என!

முற்றத்தில் இருந்து கொண்டு
முனுமுனுத்து ஏதோ பேசிக்கொள்வாய்,
அழகு நிறைந்த செவ்வாயில்-
வெற்றிலை கொண்டு மெரூகூட்டுவாய்!..

பாலில் ஒத்த நிலவும்
பதமாய் கிளம்பி வரும்
பாசமாய் வளர்ந்த எம்மை
பார்த்துக் கொண்டு புன்னகைக்கும்…

குறும்புகள் நித்தம் புரிந்து-நான்
குட்டி மழலையாய் வரும் போது
உச்சி குளிர தந்த முத்தம் -இன்று
நினைத்தாலும்  மறவாது!!

தரையில் தத்தி- தளர் நடை
பயின்று விடும் போது
பளிச்சிடும்  என் பாதங்களை
பதம் பார்க்க வரும்- எறும்பு
கூட்டங்களும் திக்குத் திசை  அறிந்து
செல்லும்-உன்
பாச அலறலைக் கண்டு!!

இரவு பகலாய் விழித்திருந்து
இறைவனிடம் வணங்கிடுவாய்
ஒழுக்கம் பல சொல்லி தந்து-என்னை
பக்குதமாய் வளர்தெடுத்தாய்!!…

ஆனால்,

இப்படி எல்லாம் செய்து விட்டு
ஏதுவும் அறியா வயதினிலே
என்னை நீயும் பதற விட்டாயே!
காரணம் ஏதுமின்றி -நீ கண்களை மூடிக்கொண்டாய்
தனிமையிலே கதறி அழுகிறேன் கஷ்டமாய் இருக்குதம்மா!

நம் பிரிவை பார்த்த
இயற்கை கூட கண்ணீர் அஞ்சலி
செலுத்துகின்றது-பிரிந்த
நம் உறவை மீண்டும் ஒன்று சேர்க்க…..

அனுதினமும் வேண்டுகிறேன்
அங்கும் நீ நலமாய் இருக்க-என்
வாழ்வின்  அழகாய் பூத்த பூ ஒன்று
அமைதியாய் உதிர்ந்து விட்டது!!!!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க