என்னவனுக்காக ஒரு மடல்

0
3292

என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்
அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன்

உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை…
உன் விரல் பிடித்து நான் நடக்க ஆசை…

பல இரவுகள் உன்னோடு கதை பேச ஆசை…
என்னில் உன்னைப் பார்க்க ஆசை…

என் உணர்வுகளை மதித்து நடக்கும்
பண்பாளனாய் காண ஆசை…

என் தவறுகளை அழகிய முறையில்
சுட்டிக் காட்டும் அன்பாளனாய் காண ஆசை…

எப்போதும் என்னுடன் துணை நிற்கும்
துணையாளனாய் காண ஆசை…

ஆயுள் முழுக்க உன் அன்பை பெற ஆசை…
இன்பத்திலும் துன்பத்திலும் நீ என்னுடன் இருக்க ஆசை …

குழந்தைப் போல் உன்னை ரசிக்க ஆசை…
செல்லச் செல்ல சண்டைகள் போட ஆசை…

கண் மூடி உன் தோளில் சாய ஆசை…
உன் மடி சாய்ந்து நான் உறங்க ஆசை…

உன் இதழோரம் இதழ் பதிக்க ஆசை…
உன் காதோரம் நான் கடிக்க ஆசை …

உன் மூச்சுக் காற்றில் நான் நனைய ஆசை…
என்னுள் பல ஆசைகள் அதை நீ நிறைவேற்ற ஆசை…

ஆசை ஆசை எல்லாம் நிறைவேற ஆசை…

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க