பெண்ணடிமைப் பேதமொழிப்போம்

0
1077
30624341_556426301408494_6837417755738981227_n

கண்ணெனப் போற்றிக்
கறைதனை அகற்றிக்
காசினியிற் பெண்ணை மதித்திடுவோம் – உயர்
கடமைகள் போற்றி
உரிமைகள் ஏற்றியே
உணர்வை நாளும் மதித்திடுவோம்

சமத்துவம் கொண்டு
சரிசமம் நின்று
சாத்தானாம் பெண்ணடிமை சாய்த்திடுவோம் – இங்கு
சகலதும் நமக்காய்
சமரசம் இலக்காய்
சளையாது சாடுதலின்றிச் சமரிடுவோம்

ஒருவரை ஒருவரிங்கே
ஓயாமற் சாட்டுதலின்றி
அறியாமை ஆதிக்கத்தை அழித்திடுவோம் -உள்ளம்
ஓங்கியெழும் புரிந்துணர்வால்
ஒப்பிட்டு நோக்காமல்
ஒன்றாகிப் பெண்ணடிமை ஒழித்திடுவோம்

கோட்பாடு கொண்டு
கொடுவாளாய் நின்று
கூடியொன்றாய்ப் பெண்ணடிமை கொன்றிடுவோம் – இங்கே
இருபாலும் இணைந்தொன்றாய்
இருமனமும் புரிந்தொன்றாய்
இங்கிரு ஆதிக்கமும் இல்லாதொழிப்போம்

உணர்வுகளை மதியாமல்
உண்மைகளை உணராமல்
ஒருபோதும் ஒற்றுமைகள் ஓங்குவதில்லை – சிலர்
கொத்தடிமை இவரென்று
கோடுதனைப் போட்டுநின்றால்
கொடுமையதும் குவலம் நீங்குவதில்லை

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க