கனவு…..

0
814
unnamed

வெயில் காலத்திலுள்ள
கானல் நீரை போல
ஏமாற்றிச் செல்லவா
வந்தாய் என் துயிலில்
ஏமாற்ற வந்தாலும்
என் இரவில்
பல சந்தோஷம்
தந்தாய் என் மனதில்
என் இமைகளை
மூடிய பின்
நுழைந்தாய் என்
அறைக்குள் அனுமதியின்றி
மறு இமை
திறக்க முன்
சிதறிச் சென்றாய்
எவ்வித நனவுமின்றி
கண்டேன் பல இன்பங்களை
ரசித்தேன்
வாழ்வின் சுகங்களை
ஏனோ அறியாமல் இருந்தேன்
இவை யாவும்
நிலவுடன் சென்று
மறைந்துவிடுமென்று…..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க