பொம்மை..

0
923
20200523_110547

சாயும் மாலைப்பொழுதினிலே
சாலை ஓரம் வண்டி நிற்க
சக்கரமும் ஓடவில்லை
சாரதியும் என் அருகிலில்லை..

கார்க்கதவை திறந்து கொண்டு
சிறு தூரம் நான் நடக்க
சில்லென்ற காற்றோடு
சிரிப்பொலியும் சேர்ந்திருக்க
சிதறியடித்துக்கொண்டு ஓடினாள்
சின்னஞ்சிறு சிறுமி ஒருத்தி..

அருகிருந்த காட்டிற்குள் அவள் ஓட
அவள் பின்னே நான் ஓட
அரண்ட வனம் எல்லாம் நிசப்தமாக
அலறிக்கொண்டு தடக்கி வீழ்ந்தாள்
ஆழமான குழிக்குள்ளே..

காப்பாற்ற நானோ கை கொடுக்க
கால்களை யாரோ பிடித்திழுக்க
கண்டதும் கத்திக் கூச்சலிட்டேன்
கண் இல்லாமல் கருகிப்போன பொம்மையொன்று….

என் கூச்சலோடு இன்னொரு கூச்சல்
காதைப்பிளக்க பதறியடித்து கண்களைத்திறந்தேன்
கண்டதோ வெறும் கனவு
கத்தியதோ என் அலாரம்….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க