உன் பிரிவின் புலம்பல்….

0
708

நிமிடங்கள் கலைந்து நேரங்கள் தொலைந்த நீ பிரிந்த பின்னும்
போதும் ஒரு காத்திருப்பு,
உனக்காக… நீ வருவாயென…..
எதிர்பாராமல் ஓர் அழைப்பு;
வரண்ட மண்ணில் பாய்ந்த வாய்க்கால் நீர் போல்…
என் ஏக்கமெல்லாம் மொத்தம் தீர்த்தாய்…
நம் காதலை தொடர்ச்சியற்றதாய் முற்றுப்புள்ளியிட்டு
துண்டிப்பிற்கு முன் மறுவார்த்தை இன்றிய
உன் மௌனத்தில் புரிந்தது
இதயத்தில் உதிரம் சொட்டஉன் பதில்கள் தாக்கும் என்று
சிறு கையளவு இதயம் தானென இழிவாக நினைத்தாயோ!
அனுதினம் நீ தரும் ரணங்களையும்
ஓரிருமுறை நீ தரும் சுகங்களையும் எண்ணி
நித்தம் என் நித்திரை தொலைத்து
இன்றாவது உறங்கிவிடு என விழிகளுக்கு மடல்களால் போர்வை விரிக்கிறேன்…
ஆனால்
வலிமிகுந்த உன் நினைவுத்தீயில் தினம் வெந்துக்கருகி;
ஓராயிரம் முறை உன்னால் கிழித்தெறியப்பட்டு;
நூறாயிரம் முறை உன்னை தேடிப் பயணிப்பது
வெறும் சதைப்பிண்டமல்ல.!!!!!!!!
உன் மனதின்  மாற்றத்தால் என் இதயம் கசங்கித் துடிப்பது
உன் பிரிவின் புலம்பல் என எப்போது அறிவாய்?…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க