அவர்

0
1441
694362-father-s-day

நான் முதல் அறிமுகப்பட்டது
அவரிடம் தான்
என்னை நெஞ்சோடு
அனைத்திட என் அன்னை….

நான் பார்க்கா உலகம்
நீ பார்க்க வேண்டும்
என தோளில் சுமந்தவர் அவர்….

நான் எட்டி நடக்கையில்
தடக்கிட, பதறிய
என் தாயிடத்தில்
கை நீட்டி நான் விழுந்தும்
வலிக்காமல் இருக்க
அவர் போட்ட கம்பளம் கட்டியவர் அவர்….

தாவி ஓடும் வயதில் ஆசையாய்
மிதி வண்டி ஓடக் கேட்டு,
மிதி வண்டி பழகி,
தவறி விழுந்த என்
அழுகை கண்டு நான்
விழாததா என்று
சிரிக்க வைத்து
அழுகை நிறுத்தியவர் அவர் ….
இன்னும் என் முடங்கால்
காயம் அதற்கு சாட்சியாக….

பசிக்கு அவரூட்டிய உணவு
இன்னும் என் நாவில் ருசிக்கிறது…
முள் என மீன் வெறுத்தேன்..
சதை மீன் நான் புசிக்க…
“பாரு எனக்கு குத்தல”
என முள்ளை புசித்தவர் அவர்….


தனக்கு ஆடை
எடுக்கையில் விலையும்
எனக்கு ஆடை
எடுக்கையில் தரமும்
பார்த்தவர் அவர்…

முதல் நாள் பள்ளி சேர
அணி அணியாய் நிற்கையில்,
நான் கால் வலி உணரக் கூடாது
என என்னை தூக்கி
என் கால் வலியையும்
சேர்த்து உணர்ந்வர் அவர்…

தன் பசி அறிந்தும்
எனக்காய் ஊட்டி விட
பள்ளி விட்டு வரும் வரை
என்னை காத்திருந்தவர் அவர் …

இன்னும் அவர்
காத்திருப்பு தொடர்கின்றது
நான் பல்கலைக்கழகம்
சென்றதன் பின்பும்….

பெண்பிள்ளை என அறிந்தும்
ஆண்பிள்ளை தைரியம் தந்து
வளர்த்தவர் அவர் …

நாளை எனக்கான
தனிப்பாதையில்
நான் தடம் புறலாமல் இருக்க…
தாய் அழுது கண்ட நான்
அவர் அழுது காணவில்லை.
காரணம் நாளை நான்
தன்நம்பிக்கை இழந்து விட கூடாது என்று…

இன்னும் உண்டு
அவரை சொல்ல ஆனால்
என் எழுத்து விடுமுறை கேட்கிறது …


கடைசியாய் சில…..
நீயும் தந்தையாவாய்
என்பதை மறந்து விடாதே…
அப்போது உன் தந்தை வலி நீ உணர்வாய் …..

இது வலித்தால்
நீ உயிருள்ள மனிதன்..
நீ உயருள்ள மனிதன்
என்றால் நீ சிறந்ந பிள்ளை..
நீ சிறந்த பிள்ளை என்றால்
எதிர்காலத்தில் முதியோர் இல்லம்
என்ற ஒன்றே இருக்காது….

இப்போது விடை கொடுக்கிறேன்
என் எழுத்துக்கு
“உன் உள்ளதில் தந்தையை அறி”
என்ற முத்திரை ஒட்டி…..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க