வாழ்வின் எதிர்பார்ப்பு

0
854

 

 

 

 

 

 

 

நம்மேல் அன்பு
செலுத்துபவர்
மீது கொண்ட
நேசங்கள் மீது
எத்தனை
#ப்ரியத்தனங்கள்…

பயணத்தில்
எதிரில் கடந்து
விடக்கூடிய
பெரிய பாரவூர்தி
மீது எத்தனை
#பயங்கள்…

நடக்கும் போது
முட்களிடையே மிதி
படப்போகும் பாதங்கள்
மீது எத்தனை
#கவனங்கள்…

சாப்பிட்டுக்கொண்டு
இருக்கும் போது
சுவை மிகு
உணவிலிருந்து,
ஒரு உறைக்கும்
பச்சை மிளகாயை
ஒதுக்கி வைப்பதில்
எத்தனை #கவனம்..

அதிவேக
ஆணியறைதலில்
கூட,
சுத்தியலிடம்
சிக்கிவிடாதவாறு
விரல்களை
காப்பாற்றுவதில்
எத்தனை #சாதுர்யம்..

சற்றுமுன்பு
இறக்கி வைக்கப்பட்ட
சாம்பார்
பாத்திரத்திடம்
துளியளவு
சூடு வாங்கியதும்
அதன் மீது
எத்தனை #கோபங்கள்…

அதிவேக
இருசக்கர வாகன
பயணத்தில்,
சட்டென
குறுக்கே வந்து போன
நாய்க்குட்டியின் மீது
எத்தனை #பயங்கள்..

எதேச்சையாக
எதையோ
எடுத்துவிட்ட
தனது குழந்தை,
அதனை
வாயில் போடுவதற்குள்
தட்டி விடுவதில்
எத்தனை #வேகம்..

இத்தனையும்
இயல்பாய்
நிகழ்ந்தேறும்
இந்த இனிய
வாழ்க்கையை
மெல்ல நகர்த்தி
செல்வது அழகிய
#எதிர்பார்ப்புகளே…!!!

 

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க