மறுப்பு

0
2722

போராட்டம் என்பதெல்லாம்
நீ என் மகவு இல்லை என
மனதை ஒத்துக் கொள்ள வைப்பதுதான்
சேர்த்து வைத்த
தூய அன்பில் மொத்தமாய்
ஒரு துளி நீல மையைப்போல்
நிறைந்து பரவி விட்டாய்
மனம் என்பதுதான்
எத்தனை வித்யாசமானது
தூரத்து உறவினன்
போலவே
தன்னிலிருந்து பிரிந்து விட்டது
இப்போதெல்லாம்
வெறும் சூன்யத்திற்கு
பயணப்படும்
கால்களை அப்படியே விட்டு விட முடியவில்லை
நகர்த்தல், நகர்தல்
சேரமுடியா பெரும் வேறுபாட்டுப்
பிளவு
சேர்ந்திருக்க சொல்லும்
அதே காரணங்கள்தான்
பிறிதொரு நாளில்
பிரிந்து விடவும்
வைத்து விடும்
உண்மையில் நேசம் என்பதெல்லாம்
மிகப் பெரும் சாபக்கேடு
வாழ்தலின் பொருட்டு
சகிக்க வேண்டிய ஒரு உணர்வு….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க