காதல்தானா இது

0
573

காற்றழைத்து வந்த தூசுகள் எல்லாம்
கண்களில் புகுந்த போதும் கலங்காத விழிகள் கொண்டவன் நான்

வியப்போடு நிற்கிறேன்
என் விழி தேடி வந்தவளை
விதி கொண்டு சென்றதும்
விழி எங்கும் நீராகிப் போவதையெண்ணி

மங்கை அவள் முகம் கண்ட நொடி
மையல் வந்து மனதை தாக்கியதும்
மெய்யாய்த் தோன்றியது காதல் தானா இது என்று

கண்ணெதிரே காற்றாய் கடந்து செல்கிறாள்
நீரூற்றாய் நிரம்பி வடிகிறது என் காதல்
இருமுகம் காட்டும் கண்ணாடியாய் மனம்
உன் மறுமுகம்தான் அவள் என்கிறது !!

உண்மையாய் இது காதல்தானா
அவள் அருகில் உதட்டினைத் தாண்டி
மொழிகள் வெளிவரத் தயங்குகின்றதே
இதுதான் காதலோ !!

 

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க