கவிதை காதலி……

0
1365

துன்பத்தில் விட்டுப்போகா
என் இனிய துணைவன்….
இன்பத்தை இனிமையாய்
இரட்டித்து தித்திக்க
கண்ணாடி விம்பமாகி
கைகோர்த்து
அத்தனை தருணத்திலும்
தோள்கொடுக்கும் என்னவனே….
எண்ணத்தில் தோன்றும்
அத்தனையும் புரிந்து
ஆழ்மனதின் ஆசைகளை
அப்படியே உணர்ந்து…
அழகிய வரியாக உருவாகும்
என் காதலனே என் கவியே….
கவிதைக் காதலி நான்
முப்பொழுதும் பிரிந்திடாதே
மூச்சுடன் கலந்த என்னுயிரே!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க