என்னவளே உன் பிரிவு……

0
845

விழி மடலின் வழியோரம்
வழியும் கண்ணீராலும் முடியாது
வலியதனைமீளாமல் துடைத்தெறிய
தொலைதூரம் நடந்தாலும்
தொடர்கிறது உன் நினைவை
விட்டு விலக முடியவில்லை எனின்
விடைகொடுக்க மட்டும் முடியுமா  ???

உன் கண் சிமிட்டல்கள் ஒவ்வொன்றும் கவ்வியபடி
என் நெஞ்சத்தின் உள்ளே கற்பனைகளால்
நான் நினைத்தது ஒன்றும் கணப்பொழுதில்
என் கண்முன்னே
மனதினால் நான் கேட்பதெல்லாம்
புன்னகை துளிகள் மட்டும் தான்
பார்வைகளால் மட்டுமே என் கேள்விக்கு விடை தருகிறாய்

நித்திய புன்னகையில்  என்னை
நித்தமும் தொலைய வைத்தாய்
கருவிழியோரங்களில் கவர்ந்திழுத்து
கம்பி சிறைகளினுள்ளே சிறை பிடித்தாய் கலை ஓவியமே
நீ பெற்ற சாபங்கள்  ஒவ்வொன்றும்
கவிஞனாய் நான் உனக்கு தந்ததவையே
மொழிந்தாலும் முடியாதம்மா
என்சாபம் கவிஞன் என்னும் கலை என்னுள் உள்ளவரை

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க