“என்னவனின் இதயத்தில் இடம் தேடுகிறேன்”

0
3344
68747470733a2f2f73332e616d617a6f6e6177732e636f6d2f776174747061642d6d656469612d736572766963652f53746f7279496d6167652f6b5f5930343563384e50622d71513d3d2d3731343737393837332e313539316534623330366233323765363732303636313038

கத்தியின்றி யுத்தம் செய்ய கற்றுக் கொண்டவன்
பக்தியுடன் பாசத்தை கற்றுத் தந்தவன்
பேதமில்லா பேரன்பு கொண்டவன்
பேசாமல் இருக்கவும் கற்றுத் தந்தவன்

அத்தனை அத்தனை அழகாய்
இத்தனை இத்தனை இரகசியத்தை
ஒற்றை நிமிடத்தில் உணர்தியவன்
ஒற்றை விழி பார்வையில் என்னை தாக்கி
ஒளிந்து கொண்டானே என் இதயத்தில்….


இதயத்தில் இடம் தேடி அலைகிறான்
அவனே என் இதயமென்று
எப்படி சொல்வேன் நானே!
உரக்க சொல்ல நினைக்கையில்
மௌனமாகிறேன்
மௌனத்தில் சொல்ல விளைகையில்
கண்ணீராகிறேன்…….

எப்படிதான் சொல்வேன்
இதயத்தின் உள்கிடக்கையை
இருட்டினில் வாழும் மெழுகுவர்த்தியை போல்
உருகுகிறேன் அவனுக்காய் உணர்வானோ அவன்

நேசத்தின் உச்சியை கடக்கவுமில்லை
நீண்டநாள் அவனுடன் பேசவுமில்லை
பார்வை பட்ட நொடியே
பாய்ந்திட்டதே அன்பின் அலை

எங்கும் அலைந்து திரியாமலே
மனம் அலைகிறதே
அவனுக்காய் என்று தெரிந்தும்
மனம் மறுக்கிறதே!
நிகழ்காலமும் அவன் நினைவில்
எதிர்காலமும் அவனுடன்
என வாழ்கிறேன் என்னவனுக்காக…..

வழிபிறக்கட்டும் வாழ்கைக்கு
வசந்த காலமே என் எதிர்காலம்
இதை சமர்ப்பிர்க்கிறேன்
உண்மை காதலர்களுக்காய்
விடை பெறுகிறேன் இவ்வரிகளுடன்
உங்கள் அன்பானவளாய்……

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க