அன்னை

0
1448

அன்னை என்பவள் தெய்வமம்மா – அவள்
அன்பினைப் போலெவரும் இல்லையம்மா
உண்ண உணவினை ஊட்டிடுவாள் – அதில்
உதிரம் கலந்தே உணர்வூட்டிடுவாள்

கண்ணை இமைபோல் காத்திடுவாள் – அவள்
கன்னம் கொஞ்சி மகிழ்ந்திடுவாள்
விண்ணில் நிலவைக் காட்டிடுவாள் – தினம்
விருந்தாய் உணவை ஊட்டிடுவாள்

தாலாட்டுப் பாடி மகிழ்ந்திடுவாள் – எனை
தன்மடி மேலவள் உறங்கவைப்பாள்
கால்மேல் போட்டெனை ஆட்டிடுவாள் – நான்
கண்மூடும் வரையவள் விழித்திருப்பாள்

சின்னஞ் சிறுகதை சொல்லிடுவாள் – நல்ல
சிந்தனை உள்ளத்தில் செதுக்கிடுவாள்
வண்ணச் சட்டை போட்டிடுவாள் – அந்த
வடிவைக் கண்டவள் இரசித்திடுவாள்

உலகினில் அவள்போல் தெய்வமில்லை – அந்த
உணர்வினில் வளர்ந்திடும் பலபிள்ளை
உலகமே அவள்மடி போலில்லை – அதை
உணராத பிள்ளைகள் பெருங்கல்லே

அன்னையை நாமும் போற்றிடுவோம் – அவள்
அடிதொழ நாளும் நினைந்திடுவோம்
தன்னையே எமக்காய்த் தந்தவளை- இந்தத்
தரணியில் தெய்வமென்றே வணங்கிடுவோம்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க