அவள் என் கனவு காதலி

0
1369

என் கனவின் நாயகி அவள்…
என்னுயிர் துறக்கும் வரை அவளது விசிறியாக நானிங்கே…
பார்வையால் என்னை
சிறைப் பிடிப்பவள் அவள்…
அவளது கைதியாகவே
ஆயுள் கழித்திட பேராசை எனக்கு…

மன்மதனின் கைகளால் தோண்டப்பட்ட
மாயாஜாலக்குழிகள் அவள் கன்னத்திலிருப்பவை…
அதில் மயங்கி விழுவது தெரிந்தும் தொலைந்து போகிறேன்…
இந்த உலகின் அதிசிறந்த மருத்துவங்கள் எல்லாம் தோற்றுவிடும்
என் கண்ணீருக்கு அவள் தரும் ஆறுதலில்…

கோவக்ககாரி தான் அவள்…
எனக்கு மட்டும் தெளிந்த மென்மையானவள்…..

தேவைகள் ஏதுமின்றி
என்னை நேசிப்பவள்…
என் தொல்லைகள் தொடர்புள்ளியானாலும்
முற்றுப் பெற விடாமல் ரசிப்பவள்……
என்னுடமையை வேறொருத்தி
தீண்டி விடாமல்
சேலையால் வேலியிட்ட காவலரண் அவள்…

அவள் புன்னகை கண்டு அதிசயங்களும் அதிசயக்கும்…
சாட்சிகளேதுமின்றி என்னை கொள்ளையிடும் கள்வனவள்…..
அவளே!!! எனக்கு சொந்தமில்லா என்னவள்…
கனாக்களில் என் காதலியானவள் அவள்…….

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க