வேண்டாம் உன் நினைவுகள்…

0
571

உன் நினைவுகளோடு வாழும் எனக்கு
நீ பேசிய மொழிகள் எதுவும் புரியவில்லை
உன் மௌனங்களோடு மட்டும்
நான் பேசி பழகியதால் என்னவோ
உன்னுடைய மௌனங்கள் மட்டும்
என் மொழிநடையாக புரிகிறது என் மனதில்…..

நீ பிரிந்து போனதை மறந்து,
தனிமை உள்ளூற சுவடாகி போனது;
நினைவுகள் மட்டும் நிரந்தரமாகிபோய்
நிமிடங்கள் ஒவ்வொன்றும் தனிமையில் தவித்து
நொறுங்கிய இதயம்
கடந்த உன் நினைவுகளை
மறுபடியும் மீட்டிட

விழி வழியில் அன்பை புதைத்து
கண்மடலை ஈரத்தால் நனைத்து
உன் பிரிவையும் நிறைவோடு ஏற்கிறேன்
நீ எனக்கு அளித்த  வலிகளை
தாங்கிய மனதில் மீண்டும் ஒருமுறை
வேண்டாம் உன் நினைவுகள்….

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க