நினைவெல்லாம் நீயடா……!

0
1155

உயிரோவியம் உண்டென்று
கண்டுகொண்டேன் நான்
உன் திருவுருவம் கண்டபின்னே……

ஓவியமும் பேசுமென
கண்டுகொண்டேன் நான்
உன் வாய்மொழி கேட்ட பின்னே….

கருவண்டும் ஜாடைபேசும்
புரிந்தது உன் கருவிழி
அசைவு கண்டே…..

கன்னக்குழி ஆழம் என்றே
புரிந்தது உன் கன்னக்குழியதிலே
தடக்கி நான் வீழ்ந்தபின்னே……

அன்பும் கூட வலிதான்
என்பேன் நீ
காட்ட மறுக்கையிலே…..

காதலும் தேர் வீதி என்பேன்
அதில் அடிக்கடி நான்
தொலைந்து போவதனால்…..

என்னை திருடியவன் நீ
என்பதனால்
திருட்டு கூட பிடித்ததடா
முறைப்பாடு கொடுக்க மறுத்து விட்டேன்….

மறதி கூட வலிமை என்பேன்
என்னை நான் மறந்ததினால்
நினைவு எல்லாம் சுகம் என்பேன்
என் நினைவெல்லாம்
நீ ஆகி நிற்பதனால்……!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க