காக்கைக் கூடு

0
1239
FB_IMG_1594131597416

 

 

 

 

 

 

தென்னை மரத்து உச்சி மீது
சுள்ளிகளால் செதுக்கப்பட்ட
சின்னஞ் சிறிய கூடு !
காக்கைகளும் குயில்களும்
குடும்பமாய் வாழும் வீடு !

அந்த வீட்டிற்கு
அயலவனாய்
அடிக்கடி வந்து செல்லும்
அணில் ஒன்று !

இவர்களின் ஒற்றுமையை ஒரு ஓரமாய் அவதானித்தபடி
மரக்கிளையில் அமர்ந்திருக்கும்
கிளி ஒன்று !

காக்கையின் கூட்டில்
பாதுகாப்பாய் இருக்கும்
குஞ்சுகளைக் கண்டு
களிப்பில் கூவும்
குயில் ஒன்று !

கடல் போன்ற வீட்டினில்
அறைகள் பல இருந்தும்
கையளவு கொண்ட அலைபேசியில்
அடைந்து கிடக்கிறது
மனிதர் கூட்டம் இன்று !

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் இது தான் வேறுபாடு என்று
சொல்லிச் சிரிக்கும் என் எழுதுகோல் பாவம் என்று !!

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க