அறிவகமே நூலகம்

0
699
fce6ccb05959056fc871ce669efa4427

அழிவடையும் உலகில்
அனைத்துமே அழிந்து தூளாகும்
அழிந்த பின்னும் வாழ்ந்தவர்களின்
அத்தாட்சி நூலாகும்!

அறிவுடைமை இல்லையேல்
அறிவீனத் தலையோங்கும்
அறிவீனர் தலைதாங்கும்
ஆட்சியும் குடைசாயும்!


கற்பவை எள்ளளவாயினும்
காலத்திற்கு உதவிடுமே!
கல்லாத எள்ளாளனாயினும்
கல்வெட்டும் உதரிடுமே!

தேடிக் கற்கும் கல்விதான்
நெஞ்சில் கூடிக் குடிகொள்ளும்
நாடிச் சென்று கற்றாலே
நமது தலைவிதியும் வெல்லும்

அறிவகமே நூலகம்!
அதை ஏற்றிடுமே வையகம்!
அறிவற்றவர் வாழ்ந்திடும்
அரண்மனையோ குழிபோகும்!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க