நாட்கள் தினமும் கற்றுத்தரும் பாடங்கள்

0
676

 

 

 

 

 

நம் வாழ்வின் 24 மணித்தியாலங்களும் ஏதோ ஒரு விதத்தில் கழிந்து கொண்டுதானிருக்கின்றன. படிப்பு, வேலை, வீட்டுச்சூழல்,நண்பர்களுடனான அரட்டை, சோஷியல் அப்ஸ் என நம்மிடமிருந்தான நேரங்கள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் நாம் எப்போது சிந்திப்போம் நமது ஒவ்வொரு நிமிடமும் வாழ்வின் போக்கையே மாற்றக்கூடிய இயலுமையைக்கொண்டிருக்கின்றது என? நிச்சயமாக ஒவ்வொருவரின் நாட்களும் ஏதோ ஒரு போராட்டத்தை கடந்ததாகவோ கடந்து கொண்டிருப்பதாகவோ எதிர்பார்க்கும் கனவினை துரத்திக்கொண்டிருக்கும் போராட்டத்தின் விளைவாகவோ அமையலாம்.அவற்றிலிருந்தான படிப்பினைகள் உங்களை ஒரு நூல் எழுதுவதற்கே தயார்படுத்திவிடுகின்றது என்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால் ஒரு நாளில் நடக்கும் பல சாதாரணமான விஷயங்களும் உள்ளன. அவற்றைப் பற்றி நாம் அறிந்தால் நமக்கு கற்பிக்கவே நிறைய விஷயங்களை கண்டு கொள்ளலாம்.

1. நாளை அர்த்தமுள்ளதாக்குங்கள் – Make Your Day Meaningful

ஒவ்வொரு காலையிலும் எழுந்திருக்கும்போது வாழ்க்கையில் நமது நோக்கத்தைப் பற்றி சிந்திக்க நமக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகின்றது என உணரமுடியும்.உலகில் மற்றும் நம்மிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்போ நமக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு நாளுமாகும். படுக்கையில் இருந்து எழுந்திருக்குமுன்இ ஒரு புதிய நாள் எனும் மிகச்சிறந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பதை உணர சிறிது நேரம் ஒதுக்குவோம். அதை எவ்வாறு அர்த்தமுள்ளதாக்குவது என சிந்திப்போம்.

2.அமைதியான, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நமக்கென ஒரு வழியை உருவாக்குவோம் – Make own way to be healthy, happy ad calm

சுவாசம் என்பது நமது உயிர்ப்பின் அடையாளம். நாம் நாள் முழுவதும் இதைச் செய்கின்றோம். ஆனால் நம்மில் பல பேர் ஒரு வழக்கமான தியானம் செய்பவராகவோ மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ளும் நபராகவோ விளையாட்டு வீரராக இல்லை. இதனால் நமது மூச்சுக்கு அதிக கவனம் செலுத்தவும் மாட்டோம். ஆனாலும்இ சுவாசமே வாழ்க்கையின் மூலமாகும். சரியாக சுவாசிக்கக் கற்றுக்கொள்வது நமக்கு பல நன்மைகளை தருகின்றது. பதட்டம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட வைக்கின்றது. நோயைத் தடுக்கின்றது, தூக்கத்தை மேம்படுத்துகின்றது, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது, எடை இழப்பை ஊக்குவிக்கின்றது. மேலும் பல நன்மைகளையும் அளிக்கின்றது.

 

 

 

 

 

3.பெரும்பாலான விஷயங்கள் நாம் நினைப்பது போல் மோசமாக இல்லை -Most things are not as bad as what we think they are
நமக்கான சமையலை நாமே செய்து கொள்வது நமது பாத்திரங்களை நாமே கழுவிக்கொள்வது என்பன நாம் நினைப்பதைப்போல அத்தனை நேரத்தை உறிஞ்சக்கூடிய விடயங்களில்லை. ஒரு பாண், இரண்டு கத்திகள், ஒரு முட்கரண்டி, ஒரு கட்டிங் போர்டு மற்றும் ஒரு கிண்ணத்தை கழுவ ஒரு நிமிடம் மட்டுமே ஆகும். இது பாத்திரம் நிறையவே அழுக்கு உணவுகளை அடுக்கி வைப்பதற்கு பதிலாக, ஒரு நிமிடம் முதலீடு செய்து அவற்றைக் கழுவி விடலாம். நாம் தயங்கக் கூடிய, பிற்படுத்தக்கூடிய விடயங்கள் அனைத்துமே விஷயங்களை உண்மையில் இருப்பதை விடவும் மிக மோசமாக்கி விடக்கூடும்.

4.பெரிய சிக்கல்களை விட சிறிய சிக்கல்களை சமாளிப்பது மிகவும் எளிதானது – Smaller issues are easier to manage than larger issues.
நமது தனியறையில் நமது பொருட்களை எவ்வாறும் கலைத்துப்போடுகின்றோம். ஆடை, காகிதம், குளியலறை துண்டுகள், ஷுக்கள் என கலைந்தபடி சில நேரங்களில் விட்டுவிடுகின்றோம். பின்னர் நேரம் ஒதுக்கி அதனை சீர் செய்கின்றோம். அவ்வாறுதான் நாம் நம் வாழ்க்கை முழுக்க இறைந்து கிடக்கும் பிரச்சினைகளை ஒருசேரப்பார்த்து மலைத்துவிடுகின்றேர். ஒரே பொழுதில் அனைத்திற்கும் சொல்யூஷன்ஸ் தேடுகின்றோம். ஆனால் உண்மையில் பிரச்சினைகள் சிறியதாக இருக்கும்போதே தீர்வினை தேடுவதே இலகுவாகும்.

5. உடை – Good Dressing for success
ஆள் பாதி ஆடை பாதி என்பது அன்றிலிருந்து இன்றுவரை பிரதானமாக கவனத்திற்கொள்ளப்படும் விடயமாகும். நம்மில் எத்தனைபேர் ஒவ்வொரு காலையிலும் ஒரு சிறிய பகுதியை நாள் முழுவதும் நம்மைஎவ்வாறு முன்வைக்க விரும்புகின்றோம் என்பதைத் தேர்வுசெய்ய ஒதுக்கி வைத்திருக்கிறோம்? ஒரு அறையில் உள்ள நம்மை நம் உடைகள் பிரதிநிதித்துவப்படுத்திவிடும்.

6. மனநிலை தொற்றுநோயாகும். எப்போதும் சாதகமான விளைவுகளைப் பகிர்வோம் – Share positive energy
ஒரு அறைக்குள், ஒரு கூட்டத்திற்குள், அலுவலகம் அல்லது வீட்டின் வழியாக நடக்கும்போதெல்லாம் மக்கள் நமக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வாய்ப்பு உள்ளது. நாம் கொடுக்கும் புன்னகை, சக்தி, பேச்சுவாண்மை நம்மிடம் மீளவே திரும்பி வரும் ஆற்றல் உள்ளது. மனநிலைகள் தொற்றுநோயாகும். எப்போதும் நேரான எண்ணங்களை பகிர்ந்திடுங்கள்.

7. உணர்ச்சிகளை ஆளும்போது வாழ்க்கையை ஆளமுடியும் – Mastering emotions lead to better life

கோபம். இது ஒரு உணர்ச்சியாகும். வீட்டிலிருந்து வெளியுலகம் வரை சாதாரணமாய் நாம் கடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளின் விளிம்பிலும் நம்மை கோபமூட்டக்கூடிய ஏதோ ஒரு சந்தர்ப்பத்திற்கு நாம் ஆட்கொள்ளப்பட்டுவிடகின்றோம். நமது கோபத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்கின்றோம் என்பது ஒரு நபராக நாம் யார் என்பதைப் பற்றி நிறைய விடயங்களை பிறருக்கு கூறுகிறது. நமது உணர்ச்சிகளை எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கின்றோம் என்பதே நம்மை நாம் பக்குவமாக கையாளக்கூடிய ஒரு செயலாற்றுகை. யாராவது நம்மை அவமதிக்கும் வகையில் ஏதாவது சொன்னால் நாம் வெளிப்படுத்தும் கடுமையான எதிர்வினை என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். உணர்ச்சிகளை ஒழுங்காக நிர்வகிக்காவிட்டால் அவை நம்மை அழிவினை நோக்கி நகர்த்தும்.

இவ்வாறு எத்தனையோ விடயங்கள் நாள்தோறும் நமமை புதுப்பிக்க நடந்து கொண்டுதானிருக்கின்றன. கற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள எப்போதுமே எல்லா நொடிகளும் நம்மை தயார் செய்து கொண்டுதானிருக்கின்றன.

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க