திருநங்கை எனும் திருமங்கை

0
1011
162775-00f0bb06

அழகான பூமி இதில் பல வண்ணம்,

குணம், ஆசை, பாசம், காதல், நட்பு,

துரோகம் ,ஏமாற்றம் என பல

விதமான முகம் கொண்ட மனிதன்

வாழ்க்கிறான் ஒருவன் எப்போதும்

நல்லவன் ஆக இருக்கமுடியாது

ஒருவன் எப்போதும் கெட்டவன்

ஆக இருக்கமுடியாது எல்லாம்

காலம் நேரம் தான் இப்படி பட்ட

எல்லாம் நாம் காண்கிறோம். இந்த

அழகான பூமியில் கடவுள் மனிதனை

படைத்தான் இதில் ஆண், பெண் என

இரு உருவத்தை தருகிறான் அதை

பால் என பிரித்து வைக்கிறான்

ஆண்பால், பெண்பால்,மலர்பால்,

ஒற்றன்பால், பலர்பால் என ஐந்து

வகைபடும் இப்படி பட்ட ஆண்பால்,

பெண்பால்,மாற்றுபால் இனம் என

அழைக்கப்படும் மூன்றாம் பால்

இனம் என அழைக்கப்படும்

திருநங்கை என அழைக்கப்படும்

(திருமங்கை)இவர்கள்

மாற்றுபாலினம் அல்ல

(அதிசயபாலினம் ) என

அழைக்கப்படவேண்டும் திரு

என்றால் அது மகாலட்சுமியை

குறிக்கும் நங்கை என்றால் அது

மங்கை(பெண் )என அர்த்தம்

அதனால் அவர்களை திருமங்கை

என தான் அழைக்கவேண்டும் இந்த

உலகை கடவுள் தான் படைத்தார்

அதில் நடிக்க நாம்மை அனுப்பி

உள்ளர் நாம் ஒவ்வொருவரும்

நமக்கு பிடித்த முகமுடியை

அணிந்து உள்ளேம் அதில் நமக்கு

நாம் நடிகன் ஆகவும்

மற்றவர்களுக்கு வில்லன் ஆகவும்

வாழ்க்கிறேம் நான் எல்லோரையும்

சொல்லவில்லை அப்படி

வாழ்பவர்கள்களுக்கு.

ஒவ்வொருவருக்கும் ஒருமனம்

உண்டு ஆண்களுக்கு பிரச்சனை

என்றால் அம்மா ,அப்பா, நண்பன்,

மனைவி என உதவ உறவுகள்

இருக்கிறது கவலைப்பட வேண்டாம்

என மனத்திற்கு மருந்தாக வார்த்தை

வருகிறாது.பெண்களுக்கு பிரச்சனை

என்றால்லும் அம்மா, அப்பா,

அண்ணன், தம்பி, தோழி, கணவன்

மற்றும் இல்லை சமுதாயமே

பின்னல் நிற்கும்.இப்படி அவர்

அவர்களுக்கு வரும் பிரச்சினைக்கு

அவர்கள் குடும்பம் பின்னல் நிற்கும்

ஆனால் இந்த உலகில் ஆண் என

பிறந்து அம்மா அப்பா

அரவணைப்பில் வளர்ந்து குடும்ப

பாசத்தில் வாழ்ந்து திடீரென்று உடல்

ரீதியாகவும் மனரீதியாகவும்

ஏற்படும் மாற்றத்தினால் பயந்து

வெளியில் மறைத்து தனக்கு உள்ளே

பெரும் போராட்டம் நடத்தி என்ன

செய்வது யாரிடம் சொல்வது என

யோசித்து வாழ்ந்து ஒதுக்கி வாழ

ஆரம்பித்து விடுகின்றனர்

திருமங்கைகள் அவர்கள் என்ன

பாவம் செய்தனர் இந்த பூமியில்

மனிதராக பிறந்தது ஒரு குற்றம்மா

அது அவர்கள் குற்றம் இல்லை

அவர்களை படைத்த கடவுள் தான்

குற்றவாளி அவர்களும் மனிதர்கள்

தான் அவர்களுக்கும் பாசம், அன்பு

வலி ,வேதனை என எல்லாம்

உணர்ச்சியும் உண்டு இந்த பூமியில்

வாழும் மனிதனின் இரத்ததின் நிறம்

எல்லோருக்கும் சிவப்பு தான்

ஆண்களுக்கு பச்சை இரத்தம்,

பெண்களுக்கு ரோஸ் இரத்தம்

திருமங்கைகளுக்கு வெள்ளை

இரத்தம் என கடவுள் இரத்தத்தை

நிறம் பிரிக்க வில்லை.நாம் மனம்

தான் பிரித்து பார்க்கிறது. ஒவ்வொரு

அம்மாவும் பல கனவுகளை சுமந்து

தான் அழகான தான் குழந்தையை

தான் கருவறையில் சுமை என

நினைக்கமால் சுகம் என நினைத்து

இருப்பர் அப்படி பெற்றெடுக்கும்

குழந்தையை தன்னை ஒரு பெண்

என நினைத்தால் அது அவமானம்,

அசிங்கம், குடும்பகௌரவம்,என

இவற்றையெல்லாம் சொல்லி

அவர்களை அடிப்பது துன்புறுத்துவது

வெறுப்பு கட்டுவது என செய்தல்

அவர்கள் விட்டை விட்டு

வெளியேறிவிடுவது அவர்களுக்கு

என ஒரு சமுதாயத்தை அமைத்து

கொள்வது பின் நாம்மே அவர்களை

பலபெயர் வைத்து அழைப்பது

அவர்கள் இப்படி தான் வாழ்வர்கள்

என கேலியாக பேசுவது. நாம் பேசும்

இடத்தில் இருப்பதால் அது நாமக்கு

சிரிப்பாகவும் விளையாட்டாகவும்

இருக்கும் இதோ ஒரு நிமிடம்

யோசித்துப் பாருங்கள் நாம் அவர்கள்

இடத்தில் இருந்தால் அது எப்படி

இருக்கும் எவ்வளவு வேதனையாக

இருக்கும் அவர்களை நாம் பாராட்ட

வேண்டம் கொஞ்சம் பாசம்

காட்டினாலே போதும் யாரும் இப்படி

வாழ ஆசைபட்டு தேடிபோவது

இல்லை தானாகவே அமைவது

அவகளிடம் முதலில் மனம் திறந்து

பேசினாலே எவ்வளவு பிரச்சனை

தீர்ந்து விடும் கொஞ்சம் பொறுமை

கொஞ்ச நேரம் அவர்களிடம் நாம்

கட்டினால் போதும் விட்டைவிட்டு

துரத்தவேண்டாம் வெளியில் போய்

வாழும் சூழ்நிலை உருவானால்

அங்கு தான் பிரச்சனை ஆரம்பம்

ஆகிறாது.தவறான பாதை

அமைகிறது போகும் பாதை

எல்லோருக்கும் பட்டுகம்பளம்

விரித்து இருப்பது இல்லை கல்முள்

கரடு முரடான பாதை தான்.

அவர்களை தூக்கி விடவேண்டம்

கைகளை தட்டி விடாமல்

இருந்தாலே போதும் அவர்களே

மேலே வந்து விடுவார்கள். உடன்

பிறந்தவர்கள்,நண்பர்கள் அவர்களை

கேலியாக பேசுவது விரட்டி விடுவது

நீ ஒரு மாதிரி என சொல்வது இதை

எல்லாம் நிறுத்த வேண்டும்.

சிறியவர்களை தவறாக பேசுவதை

தடுக்க வேண்டும் பள்ளி ஆசிரியர்கள்

அவர்களுக்கு உதவவேண்டும்

மனநிலையை புரிந்து நடக்க

வேண்டும் கல்வி முழுமையாக

அவர்களுக்கு கிடைக்க வேண்டும்

ஆசிரியர்கள் மதா,பிதா,குரு,தெய்வம்

என நாம் படித்து இருக்கிறோம்.

அப்படி பட்ட குருவாகிய

ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள்

கேலி கிண்டல் பேசமால் பார்க்க

வேண்டும் அவர்களுக்கு என

மரியாதையாக நடத்த வேண்டும்

மற்றோரு பிரச்சனை பாத்ரூம் ஆண்

பாத்ரூம் போவத இல்லை பெண்கள்

பாத்ரூம் போவத என அவர்கள்

யோசித்து பள்ளி படிப்பையே நிறுத்தி

விட முடிவு செய்து விடும்

சூழ்நிலைக்கு வந்து விடுவார்கள்

அதற்கு ஆசிரியர்கள் அவர்கள்

போகும் பாத்ரூம்மை பயண்படுத்த

அனுமதி தரவேண்டும்

பெற்றோர்களும் பள்ளியில் பேசி

அனுமதி வாங்கி தரவேண்டும் தயவு

செய்து திருநங்கையாக

மாறிவிட்டன் அவன் என் பிள்ளை

இல்லை விட்டில் இடம் இல்லை

என துரத்த வேண்டாம் அவர் எங்கு

போவர்கள் நீங்களே கொஞ்சம்

யோசித்து பாருங்கள் பார்த்து பார்த்து

வளர்த்து திடீரென வரும்

பிரச்சனையில் அம்மா, அப்பா,அக்கா

தங்கை,தம்பி,அண்ணன், சொந்தம்

பந்தம் என எல்லோரும் கைவிட்டு

விட்டால் அவர்களின் மனநிலை

என்ன ஆகும் முதலில் அம்மா,

அப்பா புரிந்து கொள்ள வேண்டும்

தான் குழந்தையையின் பிரச்சனை

பற்றி நீங்கள் உங்கள் குழந்தையை

ஏற்று கொள்ள வேண்டும் அவர்களை

நல்ல படிக்க வைக்க வேண்டும்

அவர்கள் படித்து விட்டால்

அவர்களை ஒருவர் கூட தப்பாக

பேசமுடியது முதலில்

மற்றவர்களுக்கு தெரிந்தால்

கேவலம்,அவமானம்,

குடும்பகௌரவம் அவர்கள் என்ன

பேசுவார்கள் இவர்கள் என்ன

பேசுவார்கள் என நினைப்பதை

முதலில் விடுங்கள் உங்கள் குழந்தை

நீங்கள் பத்து மாதம் சுமந்து

ஆசையாக வளர்த்து மற்றவர்

வார்த்தையை நினைத்து வேறுக்க

வேண்டம் உங்களுக்கு ஏதாவது

பிரச்சனை என்றால் சொந்தம் பந்தம்

வரும் போகும் ஆனால் உடனே

இருப்பது நீங்கள் பெற்ற பிள்ளை

தான் ஆண்ணாக இருந்தாலும்

பெண்ணாக இருந்தாலும்

திருமங்கையாக மாறினாலும் அன்பு

குறையாது அம்மா அப்பா என்ற

உறவு மாறது முதலில்

வாழ்க்கையை நாமக்காக

வாழவேண்டும் மற்றவர்களுக்கு என

வாழகூடாது அவர்கள் என்ன

சொல்வார்கள் என நினைக்ககூடாது

ஒரு ஆண் திருமங்கையாக மாறுவது

மாறுஜென்மாம் எடுப்பதற்கு சமம்

அவர்கள் படும் கஷ்டம் சொல்ல

முடியாது அவ்வளவு வேதனை

வலி இரண்டையும் மீண்டு

வரவேண்டும் வாழ்வசவா என

பேரும் போரட்டம் கடந்து வருவது

தான் திருமங்கை நாம் அவர்களை

பல இடங்களில் பார்க்கிறேம்

ஆனால் வெளிமாநிலங்களில்

அவர்களை தெய்வமாக

பார்க்கின்றனர்.நாம் அவர்களை

தப்பாக பார்க்கும் பார்வை மாற்ற

வேண்டும் அவர்களும்

வாழவேண்டும் அதற்கு பணம்

வேண்டும் பசி எடுத்தால்

சாப்பிடவேண்டும் அதனால் தான்

அவர்கள் வேறு வாழ்க்கை என

தவறான பாதையில் செல்ல மனம்

பார்க்கிறது. நாம் பார்த்து இருப்போம்

அவர்கள் பஸ்சில், ரயில்களில் என

அவர்கள் கைகள் தட்டி பணம்

கேட்பது என அவர்கள் ஒன்றாக

கூட்டமாக போவது என தனியாக

அவர்கள் தெரிவர்கள் அவர்கள்

கடவுளின் அம்சம்தான் உலகை

காக்கும் ஆதிசக்தி நாயகன் ஆகிலாம்

ஆளும் ஈஸ்வரன் அவரே

அர்த்தநாரீஸ்வரர்ராக காட்சி

அளிக்கிறார் அதில் ஆண் பாதி பெண்

பாதியாக காட்சி அளிக்கிறார் அவரே

அர்த்தநாரீஸ்வரர்ராக மாறி

திருமங்கைகள் கடவுள் தான்

அவர்களும் மனிதர்கள் தான் இந்த

பூமியில் வாழலாம் என கடவுளே

மாறி காட்சி அளிக்கிறார்.இன்று

நிறைய திருமங்கைகள் படித்து

டாக்டர், செவிலியர், எஸ்.ஐ,

நடனம்,நடிகைகள் என இன்று பல

இடங்களில் சாதனை பெண்மணிகள்

வரிசையில் திருமங்கைகள் தடம்

பதித்து வருகின்றனர் .இதே போல்

அவர்கள் முன்னேற்றம் அடைந்து

வருகின்றனர்.நாம் அவர்களுக்கு

வேலை தரலாம் ஒன்றும் அதில்

தவறு இல்லை எனக்கே நீண்ட

நாள் ஆசை ஒரு கம்பெனி ஆரம்பிக்க

வேண்டும் அதில் திருமங்கைகளுக்கு

வேலை வழங்கவேண்டும்

அவர்களும் மனிதர்கள் தானே

படித்து முடித்து வேலை வந்த

உடனே எனது அடுத்த வேலை

இதுதான் நான் மட்டும் இல்லை

நீங்களும் அவர்களுக்கு வேலை

கொடுத்து உதவலாம் அவர்களும்

சமுதாயத்தில் மதிப்பு மரியாதை

உடன் வாழலாம் அவர்களை

நாம் வாழவைக்கலாம் அவர்கள்

அதிசயபால் திருமங்கைகள் நல்ல

உள்ளங்கள் இனியாவது அவர்களை

புரிந்து மதித்து குடும்பத்துடன்

வாழவிடலாம் தாய் விட்டை விட்டு

வெளியில் அனுப்பினால் தாய் நாடு

உன்னை காக்கும் தங்க மகளே வர

என அன்போடு உன்னை அழைக்கும்

அவர்களை வாழவைக்கலாம்

அவர்களை திருமங்கை என

அன்புடன் அழைக்கலாம்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க