தாய்மை

0
151

ஒரு துளி உதிரத்தில்
உருவான கருவை
தன் உதரத்தில் சுமந்து
உணவூட்டி உயிர் காத்து
உயிரை பணயம் வைத்து
உலகிற்கு கொண்டு வந்து
பிரசவவலி மறுநொடியில் மறந்து
பரவசமாய் மார்போடணைத்து
உதிரத்தையே உணவாக்கி
ஊண் உறக்கம் துறந்து
உள்ளத்தின் ஆசைகளை
ஆழக் குழி வெட்டி புதைத்து
உனக்காக மட்டுமே வாழ்ந்து
உனை ஆளாக்கி உயர்த்திட்ட
உத்தமி அவள் தான் தாய்…

இங்கே கருத்துக்களை பதிவிடவும்

avatar
  இங்கே பதிவு செய்க  
என் கருத்துக்கு