காலத்தின் கைதி…….

10
1388
Time-machine-1

” ஹலோ… செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?….”. போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. “புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே….” தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான். அது பூஜாவோட பேர்த் டேக்காக செந்தில் கிப்ட் பண்ற புது போன். “சரி விடுங்க டியர், றோங் நம்பரா இருக்கும்” கூறினாள் பூஜா. செந்திலும் பூஜாவும் இப்போ மூணு மாசமா தான் லவ் பண்றாங்க. இப்போ பேர்த் டேக்கு கிப்ட் கொடுத்து கொண்டாட ஸ்கூலோட மூன்றாம் மாடில ஸ்கூல் முடிஞ்சு எல்லாரும் போனதுக்கு பிறகு மீட் பண்ணி இருக்காங்க. ஆமா ஸ்கூல் லவ் தானுங்க. ஆனா பூஜாவோட க்ளாஸ் மேட் இல்ல செந்தில். அவன் அந்த ஸ்கூல் ப்ரின்சிப்பல். செந்திலுக்கு இப்ப தான் முப்பது வயசு. அவளுக்கு பதினெட்டு. இப்படி தான் ஸ்கூல் முடிஞ்சதுக்கு பிறகு டெய்லி மீட் பண்ணுவாங்க மூன்றாவது மாடில இருக்கிற 13 ஏ க்ளாஸ்ல.


இன்றைக்கு பேர்த்டே வேற. ஸ்பெஷல் டே. பூஜாவுக்கு சந்தோஷம் அந்த போன் கிப்டால. பேசிக்கொண்டு இருக்கும் போது தான் பூஜாவுக்கு ஞாபகம் வந்தது. ” அச்சச்சோ! பக்கத்து கடைல ஸ்னாக்ஸ் ஆர்டர் பண்ணான்… வெயிட் நான் போய் வாங்கிட்டு வாறன்” கூறிவிட்டு கீழே இறங்கினாள் பூஜா. செந்தில் க்ளாஸ் ஜன்னல் வழியா ரோட் தாண்டி அந்தப்பக்கம் இருக்கிற கட்டப்பட்டு குறையாக இருக்கிற கட்டடத்தொகுதில ஸ்கூல் பையன் ஒருத்தன் சாராய போத்தலோட நிக்கிறத பாக்கிறான். அவன கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று நீண்ட காலமா காத்திருக்கிற செந்திலுக்கு நல்ல சந்தர்ப்பம். ” வெயிட் பண்ணு வந்திடுறேன்” என்று அந்த க்ளாஸ் ப்ளாக் போர்ட்ல எழுதி வச்சிட்டு கீழ இறங்கி ஓடினான் அந்த கட்டடத்தை நோக்கி. அந்த பையன் இருக்கிற இடத்துக்கு போக சுத்தி சுத்தி ஓடுறான் செந்தில். “டொள்” என்று சத்தம். செந்திலின் முகத்தில் இரும்புக்கம்பியால் யாரோ அடித்த ஓசை அது. நிலை தவறி கீழே சேற்று நிலத்தில் வீழ்ந்தான் செந்தில்.

உடல் முழுவதும் சேறு. அடிச்சவன் யாருன்னு பார்க்க கோவத்தோட எழுந்து நின்றான் செந்தில். அந்த பையனா இருக்கும் என்றது தான் அவனோட எதிர்பார்ப்பு. ஆனா அவன் இல்ல. அங்கே வேறு ஒருத்தன் நின்று கொண்டிருந்தான். அவன் செந்திலுக்கு ஒரு முடிவு கட்டும் தீர்மானம் எடுத்தவன் போல் நின்றான். முகத்தை ஒரு துணியால் மூடி கட்டிய படி விறைப்பாக நின்றுகொண்டிருந்தான் அவன்.


செந்திலை பல வகையாக தாக்கவும் முற்பட்டான். அவனிடம் இருந்து எப்படியோ தப்பிவிட வேண்டும் என்று ஓட ஆரம்பித்தான் செந்தில். அவனும் துரத்திக் கொண்டு பின்னாலேயே ஓடினான். செந்தில் வேகம் அதிகரித்து ஓடி ஒரு சேர்ச்சை அடைந்தான். அந்த சேர்ச்சுக்குள்ளே எல்லாம் வித்தியாசமாக இருந்தது. ஏனைய கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்று அதன் உள்ளே இருக்கவில்லை. எது எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த சேர்ச்சுக்குள் இடம் தேடினான்.
” எக்ஸ்கியூஸ் மீ. உங்களுக்கு என்ன வேணும்?” யாரோ கேட்டுக்கொண்டே நடந்து வர திரும்பி பார்த்தான் செந்தில். அந்த சேர்ச் பாதர் வந்து நின்றிருந்தார். ” என்னை எவனோ கொல்றதுக்காக துரத்தி வாறான். இங்கே நான் ஒளிஞ்சுக்கிறன். ப்ளீஸ்” பதற்றத்துடன் கேட்டான் செந்தில்.
” சரி சரி பயப்படாதீங்க! அதோ அந்த றூம்க்கு போங்க” லிப்ட் மாதிரி ஒரு அறையை காட்டினார் பாதர். ஓடிச்சென்று அதற்குள்ளே நிற்க பாதர் றிமோட் மாதிரி ஒன்றை கையில் எடுத்து அழுத்த அறையின் கதவு மூடிக்கொண்டது.

சிறு வினாடிகள் உருண்டோட அவ் அறை விட்டு வெளியே வந்தான் செந்தில். வெளியே பாதர் வேறு வேலையாக நின்று கொண்டிருந்தார். இவன் சர்ச்சுக்குள் எப்போ வந்தான் என்ற பாணியில்,
“யார் நீங்க… இங்கே இருந்து வாறீங்க” பாதர் கேட்டார்.
“என்ன? நீங்க தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த றூமுக்குள்ள அனுப்பினீங்க….” சந்தேகத்துடன் கேட்டான் .
” வாட்?? ……ப்ளீஸ் பொய் சொல்லாதீங்க….தயவுசெய்து வெளில போறீங்களா?? ” பாதர் வாசலை நோக்கி கையைக்காட்டினார்.
சரி இவன் ஏதோ பிதற்றுகிறான். பூஜா தனியா காத்திருப்பாளே னு யோசித்துக்கொண்டே வெளியேறினான். பூஜாவுக்கு கொடுத்த போன் அவகிட்ட தானே இருக்கு  என்று ஞாபகம் வந்தவனாய் அவளுடைய புது நம்பருக்கு போன் செய்தான் செந்தில். அவளுக்கு டயல் செய்தவன் அங்கே கேட்ட குரலை வைத்து ஆடிப்போனான்.

” ஹலோ… செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?….”தான் பேசிய அதே வார்த்தைகள்…. தனது குரலில். கனவா நனவா புரியாதவனாய் முழித்தான். நா வறண்டு வயிறு கலங்கியது. காதில் வைத்திருந்த போனோடு கையும் நடுங்கியது. கையில் கட்டியிருந்த கடிகாரத்தை கண்ணின் பார்வைக்குத் திருப்பினான். அங்கே மேலும் இரண்டு இடிகள் அவனது தலையில் விழுந்தது. ஒன்று கடிகாரத்தில் விழுந்த அவனது முகத்தின் விம்பம். சற்று முன்பு அந்த மர்ம மனிதன் அடித்த காயங்கள் முகத்தில் இல்லை. இன்னொன்று நேரம். ஸ்கூலில் பூஜாவோடு நின்று தான் போன் பேசிய அதே நேரம். ஆம் செந்தில் டைம் ட்ராவல் பண்ணி ஐம்பது நிமிடம் முன்னாடி போய்டான். செந்திலுக்கு ஏதோ பிழையா பட்டது. வெளியே வரும்போதே சர்ச்சோட முன் பெயர்ப்பலகையில் அந்த பாதரின் நம்பரையும் அட்றெஸையும் பார்த்து வைத்துக்கொண்டான். மனக்கனத்துடன் ஸ்கூல நோக்கி ஓட விளைந்தான். வீதியில் ஒரு பைக் சாவியோட நிக்கிறத பார்த்து ஆபத்துக்கு பாவம் இல்லை என அதை எடுத்துக்கொண்டு பறந்தான் ஸ்கூலுக்கு. பைத்தியக்காரன் போன்ற பாவனையில் பறக்கின்றான் அவன். பூஜாவோடு எவனோ இருக்கான்;அவள காப்பாத்தனும் என்ற வேட்கை. இதற்கிடையில் பின்னாலேயே வேகமாக வந்த கார் அவனது பைக்கை மோத தூக்கி வீசப்பட்டு றோட்டோடு முகம் தேய்த்த படி கீழே வீழ்கிறான். முகம் முழுவதும் இரத்தம். அங்கே வீதியில் வீழ்ந்து கிடந்த ஒரு துணியை எடுத்து முகத்தில் சுற்றி இரத்தப் போக்கை கட்டுப்படுத்த முயல்கிறான். துணியை சுற்றிய மாத்திரத்தில் பைக்கை நோக்கி வர அது மோதிய காருடன் பிரிக்க முடியாத நிலையில் சிதையுண்டிருக்க அருகே போகாமல் அதிலேயே மண்டியிட்டு விழுந்தான். இந்தக்கணம் தான் அவன் சில விஷயங்களை புரிந்தவனாய் மீள விதி வழி வகுக்கிறது. பைக்கிலிருந்து கழன்று விழுந்த கண்ணாடி ஒன்று தன் முன்னே கிடக்க அதில் துணி சுற்றி உள்ள தன் முகத்தை பார்த்து இன்னும் அரண்டு போகிறான். தான் ஒரு காலச்சுழலலில் மாட்டிவிட்டேன் என்றும் ஒரு மணித்தியாலம் முன்னோக்கிய மனிதனாக தனது மாற்றத்தையும் உணர்ந்து கொண்ட அவன் தற்போது தனது காதலியுடன் இருப்பது நிகழ்கால செந்தில் என்பதை சுதாரித்துக் கொள்கிறான். தன்னை கம்பியால் அடித்த அந்த மர்ம நபரை போன்றே தன் தற்போதைய முகநிலையை கண்டு நடுங்கிய அவன் தனது நிகழ்காலத்தில் தன்னை தாக்கியது தனது பிரதி என்பதையும் அறிகிறான்.

சரி நடந்தவை போகட்டும் நான் தானே உண்மையான செந்தில். பூஜா எனக்குரியவள் என்ற அவனது மனவோட்டத்தின் பின் இப்போது பூஜாவோடு உள்ள, தன்னோடு போனில் பேசிய அந்த நிகழ்கால செந்திலை தான் கொன்று அவனை புதைந்த பின் தான் பூஜாவோடு சேர்ந்து விடலாம் என்ற அந்த யோசனை தோன்ற என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே எழுந்தான் ஐம்பது நிமிடம் முன்னாேக்கி சென்ற செந்தில். சரியென்று ஸ்கூலை நோக்கி ஓடியே போகிறான். அங்கே வீதியை கடந்து அந்த குறையில் விடப்பட்ட கட்டடத் தொகுதியை நோக்கி தான் மேலே சாராயப் போத்தலுடன் கண்ட மாணவன் செல்வதைக் காண்கிறான். முன்பு நடந்தவை ஞாபகம் வர அந்த பையனை மேலே நின்று பார்த்து நிகழ்கால செந்தில் வருவான் அவனை எப்படியோ கொன்று விடலாம் என்று அந்த பையனை பின் தொடர்கிறான் ஐம்பது நிமிடம் முன்னோக்கி சென்ற செந்தில். மேலே சென்ற பையன் சாராயப் போத்தலை எடுத்து குடிக்க ஆரம்பிக்கிறான்.
நேரம் ஆகிறது பூஜா கீழிறங்கி ஸ்னாக்ஸ் வாங்க செல்கிறாள். பின் குடிப்பவனை பார்த்து நிகழ்கால செந்திலும் இறங்கி வருகிறான். நிகழ்கால செந்தில் வருவதைக் கண்ட முகத்தை துணியால் மூடியுள்ள ஐம்பது நிமிடம் முன்னோக்கி சென்ற செந்தில் அவனை ஒரு கம்பியால் முகத்தில் அடித்து வீழ்த்துகிறான். இங்கே நிகழ்காலசெந்தில் தப்பித்து ஓடி சேர்ச் செல்வது எல்லாம் நமக்கு தெரியும் இனி ஐம்பது நிமிடம் முன்னோக்கி சென்ற செந்தில் பார்வையில் கதையை காண்போம். நிகழ்கால செந்திலை அடித்து துரத்திச் செல்வதை பார்த்த அந்த பையன் ” ப்ரின்சிப்பலை யாரோ அடிக்கிறாங்க ” என்று கத்திக்கொண்டே ஸ்கூல் பக்கமாக ஓட அவனை முதலில் தடுத்து நிறுத்த சென்றான் ஐம்பது நிமிடம் முன்னோக்கி சென்ற செந்தில். அவன் எங்கேயோ திடீர் என மாயமாக, ஸ்கூல் உள்ளே சென்று பூஜா இருந்த கட்டிடத்தில் மேல் நோக்கி ஏறுகிறான் செந்தில். முகத்தில் துணியை கட்டிய படி எவனோ வருவதை கண்டு பயந்தோட விளையும் பூஜா கால் தடக்கி கீழே விழுகிறாள். மேசை ஒன்றில் இருந்த ஆணி தலையில் குத்தி அங்கே இறந்து போகிறாள்.

தன் கண் முன்னால் காதலி இறந்து கிடப்பதை பார்த்த செந்தில் இதற்கெல்லாம் அந்த டைம் ட்ராவல் தான் காரணம் என்று நொந்து கொள்கிறான். உடனடியாக அந்த பாதருக்கு போன் செய்கிறான். தன் நிலை கூறி கதறி அழுகிறான். இப்போது உங்களிடம் நிகழ்கால செந்தில் வருகிறான் அவனை மீண்டும் ஐம்பது நிமிஷம் முன்னோக்கி செல்ல வைக்க வேண்டுகிறான்.அந்த டைம் மெஷின வச்சு இந்த உதவிய எனக்கு செய்யும் படியும் கதறுகிறான்.

“அவன் முன்னோக்கி செல்ல நிகழ்கால என் பூஜா திருப்ப வருவா, இப்போ நிகழ்கால செந்தில் ஐம்பது நிமிடம் முன்னோக்கி போய் அவன் ஸ்கூலுக்கு வரும் போது அவனை நான் கெல்லுறேன். அப்போ என் பூஜா பிழைச்சிடுவால?”என்று கேட்க, பாதரும் சம்மதிக்கிறார். பாதரிடம் சென்று சேர்ச்சை விட்டு வெளியே வரும் அந்த ஐம்பது நிமிடம் முன்னோக்கி சென்ற செந்தில் பைக்கை எடுத்துக்கொண்டு வர ஸ்கூலில் நின்ற தனது காரை எடுத்துக்கொண்டு செந்தில் அவனை பின் தொடருமாறு அவன் வரும் வழியில் தயாராக நிற்கிறான். பைக்கில் வரும் செந்தில் தன்னை கடந்து செல்ல காரில் இருந்த செந்தில் வேகமாக காரை ஓட்டி பைக்கை மோதி விழ வைக்கிறான். அவனது எண்ணம் பைக்கில் வந்தவன் இறப்பது தான் . விதி வலியது என்பதை நிரூபித்தது. பைக்கில் சென்றவன் றோட்டில் முகம் தேய்த்த படி விழ காரில் வந்த செந்தில் கழுத்தில் எங்கிருந்தோ வந்த கண்ணாடி துண்டு ஏற அவன் அங்கேயே மடிகிறான்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
10 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Kasthury Sothinathan
Kasthury Sothinathan
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமையான கதை இது
விறுவிறுப்பான திருப்பங்களுடன்
சிறிதும் எதிர்பாராத காலமாற்றம்

Kasthury Sothinathan
Kasthury Sothinathan
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

நன்று நன்று
வாழ்த்துக்கள் வஞ்சிமறவன்

User Avatar
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Excellent…bro…. keep rocking….

East N' West on Board Booking
East N' West on Board Booking
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb…

Kithan Sharma
Kithan Sharma
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிக அருமையான கதை விறுவிறுப்புடனும் சுவாரசியம் கலந்த படைப்பு வாழ்த்துக்கள்.