ஈர நெஞ்சில் ஓர் விதை…

1
859

நீண்ட இடைவெளிக்குப் பின்
என் நிசப்தமான இரவு
உறங்க மறுக்கிறது இதயம்
எதையோ அசைபோட்டபடி….

பழக்கங்கள் அதிகமில்லை
ஆனாலும் உள்ளத்தில் இறங்கிவிட்டாள் …

தூண்டில் போட்டிழுக்கும்
அழகுக் குவியலில்லை
இருந்தும்,
அவள் ஒப்பனைகளுக்கு
இணையற்றவள்…

இலைகளுக்குள்
மறையும் பிறைநிலாப் போல…
அழகின் உடை
அழகின்மையால்
களவாடப்பட்டது….

கலைந்த தலையுடன்
கட்டாந்தரை தேவதை
வறுமைக் காதல் முத்தமிட்ட
ஈரம் காயாமல் ..

வயிற்று பசியுடன்
வாதம் செய்ய முடியாமல்…
யாசிக்கும் அவள் கரங்கள்
காற்றில் மிதந்தபடியே
கண் முன்னே விரிகிறது…

பசியும் ஏக்கமும்
கண்ணிலே மின்ன
உணர்வுகளை
உச்சரிக்கத் தெரியா
பிள்ளையின் கவித்துவம்
கண்ணீர் துளிகளுக்குள்
சந்தனமாய்..

ஊன்றிச் சென்றாள்
ஈரமான நெஞ்சில் ஓர் விதையை….!!

சில்லறை இட்ட சாக்கில்
நானும் கொஞ்சம்
வாங்கி வந்தேன்
அவளது வறுமையில்
கொஞ்சத்தை…

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Razi Raz
Razi Raz
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உண்மைதான் எனக்கும் இவ்வாறு அனுபவங்கள் நேர்ந்ததுண்டு