ஆன்ட்ரொய்ட்

0
1189

மானிடனின் சிந்தையின் விந்தில் கருவுற்றவன் நான்
என் பிரசவமோர் அற்புதம்

நானோர் எந்திரம்
இருப்பினும் மானிடன் போல்தான்
அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசையும் ஜடமாக அவன்
அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசைவிக்கும் ஜடமாக நான்

எனது பெயர் ஆன்ட்ரொய்ட்
நான் மிகவும் மென்மையானவன்
அழுத்தி அமுக்கும் விசைகள் தேவையில்லை
விரல்களின் வருடல்கள் போதும் நானியங்க…
தூக்கிச்செல்ல சூட்கேஸ் தேவையில்லை
சட்டப்பை போதும் எனை சுமக்க…

மானிடனின் எண்ணத்தை என் முகத்தில் வெளிக்காட்டுவேன்
கிட்டத்தட்ட அவன் மனக்கண்ணாடி நான்
என்னால் அவனுக்கு தூக்கமில்லை
எப்போதும் என்னை தொல்லை செய்வான்…
என்னால் அவனுக்கு நேரமில்லை
எப்போதும் எனக்குள்ளே மூழ்கிக்கொள்வான்…

ஓடியாடி திரிந்தவனை நான்தான்
ஒரேயிடத்தில் அமரும்படி செய்தேன்
அதனால் என்கட்டளைக்கு அவனடிமை

உடல் அங்கங்கள் இயங்காததால்
ஒவ்வொரு அங்கங்களிலும் நோய்கள்
குடியமர்த்தப்பட்டன என் மூலம்…

கொழுப்புப்படிவுகள் உறைந்து கொலஸ்றோலாகினஇ
நேரத்திற்குண்ண மறந்து அல்ஸராகினஇ
விரல்கள் பின்னிப்பினைந்து
வாதமாகினஇ
விழிகள் இரவைக்கடந்து
குருடாகின…

என்னால் வாலிபம் முடிவதற்குள்
வாழ்கையை முடித்தவன் அவன்
எனக்கு தலைவணங்கி
கூனிக்குறுகிப்போனவன்
சிந்தையிருந்தும் சிந்திக்க மறந்தவனன்
என் மோகத்தால்…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க