சில உபயோகமான வாழ்க்கை பாடங்கள்

2
1190
  • கை குலுக்கும் பொழுது உறுதியாக கை கொடுங்கள்.
  • கண்ணைப் பார்த்து பேசவும். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும்.

  • சண்டை என்று வந்தால் எப்பொழுதும் முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும். அதுவும் பலமாக இருக்கட்டும்.
  • எப்பொழுதும் துணிச்சலை இழக்காதீர்கள். பயம் உங்கள் தொண்டையை அடைக்கும் பொழுதும் துணிச்சலுடன் இருங்கள் அல்லது இருப்பது போல் நடியுங்கள்.
  • வாழ்க்கை துணை அல்லது காதலி இருவரையும் கவனமாக தேர்வு செய்யுங்கள். ஏனெனில் உங்களது வாழ்க்கையின் 90 சதவீதம் மகிழ்ச்சியோ துக்கமோ அது இவரிடமிருந்து தான் வரும்.

  • உங்களுக்கு யார் என்று தெரியாத நபருக்கு உதவி செய்யுங்கள்.
  • உங்கள் புத்தகங்களில் நீங்கள் விரும்பாத புத்தகங்களை மட்டும் கடனாக கொடுங்கள்.
  • குழந்தைகளோடு விளையாடும் பொழுது, அவர்களை வெற்றி பெற விடுங்கள்.
  • இந்த உலகத்தில் துக்கப்படும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. பிறக்கும் பொழுதும் வெறும் கையோடு தான் வந்தோம் போகும் பொழுதும் வெறும் கையோடு தான் போக போகிறோம். எனவே எப்பொழுதும் விளையாட்டு தனமாக இருங்கள்.
  • எல்லா பூட்டுகளும் சாவிகளோடு தான் தயாரிக்க படுகின்றன அது போலவே எல்லா மோசமான சூழ்நிலைகளும் அதற்கான தீர்வுகளோடு தான் வருகின்றன.

  • இதற்கு மேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றிருக்கும் நபரோடு மோதாதீர்கள்.
  • நீங்கள் விரும்பும் நபரை எவ்வளவு விரும்புகிறீர்கள் என கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து விடுங்கள்.
  • நண்பர்களோ உறவினர்களோ மருத்துவமனையில் இருந்தால், அங்கே சென்று நலம் விசாரியுங்கள்.
  • அவ்வப்பொழுது அதிகம் பயணிக்காத சாலையில் பயணம் செய்யுங்கள்.

  • தூங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு சிறிய நோட்டையும் பேனாவையும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றும் அந்த யோசனை படுக்கையில் இருக்கும் பொழுது தான் வரும்.
  • வங்கி வாசலில் நிற்கும் காவலாளியாக இருக்கட்டும், டீ போட்டு கொடுக்கும் மாஸ்டராக இருக்கட்டும் ஒரு வணக்கத்தை தெரிவியுங்கள்.
  • பிடிக்காத நபரை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளாதீர்கள்.
  • குழந்தைகள் போகும் பள்ளிப் பேருந்தை பார்த்தால் டாடா சொல்லுங்கள். ஒரு சிறு குழந்தையைப் பார்த்தால் சிரிக்க மறக்காதீர்கள்.

  • வாழ்க்கையை நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள். வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் மர்மம் தான்.
  • எப்பொழுதும் ஆபத்தை எதிர் நோக்கியே இருங்கள். ஆபத்திலேயே வாழுங்கள்.
4 2 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
2 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Sanjana
Sanjana
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Great…

Fathima
Fathima
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உங்களுக்கென சில நியதிகளை வகுத்துக் கொள்ளுங்கள். அது நியாயம் எனும் பட்சத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்காதீர்கள்.