வெயிலின் ரசிகராய் நாங்கள்…!!

0
617

சுற்றிலும் வெம்மை
உள்ளுக்குள் வெறுமை
தீச்சட்டி தேகத்தில்
துளிர்த்ததென்னவோ
புழுக்கப் பூக்கள்… !!

உள்ளுக்குள் உலை கொதிக்க
பிடரியில் அறைந்தால் போல் கிடைத்ததென்னவோ
அனல் முத்தங்கள்..!!

சுள்ளென்ற முதுகும்
கொப்புளித்த பாதங்களும்
தடுமாற எங்கள்
ஒட்டிய வயிற்றுக்குள்
ஓராயிரம் நண்டுகள்….!!

இந்திரனின் மன்மத
அம்புகளும்
திக்குமுக்காடுகின்றன
எங்களின் ,
உஷ்ணப் பெருமூச்சில்..!!!

இன்னும் எத்தனை வலிகள்
இத்தனை எரிச்சல்களும்
இனிமையானவை எங்களுக்கு
எங்கள்
வயிற்றுப் பசி உக்கிரமாய் எரிக்கும்பொழுதும்
வெயிலின் ரசிகராய் நாங்கள்…!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க