விதியின் விலகல்

0
2438
E3ADDF4D-5AED-4BD1-BACD-0961390B77D0

ஒற்றையடிப் பாதையிலே ஒதுங்கிய சிட்டுகளே
ஓரக்கண் பார்வையாலே
ஒவ்வொன்றாய் உணர்த்துறீர்களே!!!

மதியிழந்த மானிடர்கள்
விதியென்று கடந்து போவர்
சிட்டுகளின் முனுமுனுப்பை
யார்தான் இங்கு கேட்டறிவர்

தெருவோர விளக்குகளால்
வீதிகளும் வெளிச்சமாகும்
விதிசெய்யும் விளையாட்டில்
இருள்சூழ்ந்த வாழ்க்கையாகும்

வீட்டிலுள்ளோர் உண்டு மகிழ
விடியுமுன்னே செல்வோருண்டு
கூட்டிலுள்ள பட்சிகளும்
இறைதேடி போவதுமுண்டு

ஏராள துயர் வந்தும்
ஏனென்று கேட்க யாருண்டு
வழிப்போக்கர் யாருமுண்டு
கைகொடுக்க யார்தான் உண்டு..?

கைவிட்ட சிசுக்கள்தான்
கையேந்தி தவிக்கிறதே..
தத்தடுத்து வளர்க்க மனம்
தத்தளித்து துடிக்கிறதே…!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க