மரண வாக்குமூலம்

0
380
love-break-up-1ef74ff5

இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும்
ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே
உருவம் கொண்டிருக்கின்றன….

ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை
காயம் படுத்திவிட கூடாதென்பதால் …

அதிகம் பேசியதில்லை உன்னிடம்
ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் …

மனதிற்குள் கதை பல பேசி,
மறுமுனையில் மறுதலிக்காமல் நீ ஏற்பதாய் எண்ணி
மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன் …

கனவுகளில் காதலை சொல்லி ,
காதலியாய் உன் கைக்கோர்த்து
கனதூரம் கடந்து போயிருக்கிறேன் …

ஆனால் நிசத்தில் ஏராளமான முறை முயன்றும்
முடியாமல் போனது .
ஏனோ தெரியவில்லை , என் ஏக்கங்கள் எல்லாம்
ஏமாற்றமாய் தான் போயின …

எல்லாம் முடிந்த பின்பும்
எந்தவித குறையும் இன்றி ,
இதயத்தோடு இன்னும் இருக்கிறது
என் காதல் …

தகப்பனாகி , தலை நிரைத்து தாத்தாவாகி,
தள்ளாத வயது ஆன போதும் ,
தரம் குறையாமல் ததும்பி நிற்கிறாய்
என் காதலாய் …

வாழும் போது ஏனோ ,
வார்த்தையை வார்க்க முடியமால்
வருத்தங்களோடு வாழ்ந்திருக்கிறேன் …

உயிர் போகும் தருவாயிலாவது
உள்ளம் எல்லாம் நிறைந்த என் காதலை
உன்னிடம் சொல்லாது போனால்
உறக்கம் கொள்ளாது போகும்
என் ஆன்மா …

சாகும் போது ஏனும்
சங்கடங்களை கலைந்து , சந்தோசமாய்
சாவை சந்திக்க , சந்தேகமின்றி இது
இதமாய் அமையும் என்றெண்ணியே
இந்த முயற்சி …

நான் இருக்கும் போது நீ பாடும்
இன்னிசை பாவாக  இது இல்லாது போயிடினும்
என் இறப்புக்கு நீ பாடும் இரங்கற்பாவாக
இது அமைந்திடினும் சந்தோசமே
எனக்கு …

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ
கோவை-35

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க