பச்சையுலகம்

0
427
IMG_20210305_151923-49a575c4

மின்னலின் மேனியுடன்
மின்னிக்கொள்ளும் தன்னழகை
சில்லென்று சிலிர்த்திடும்
அந்தப் பனித்துளியுடன்
சிரித்து மகிழ்ந்திடும்
காலை…

மொட்டுக்குள்
விறைந்திட முன் கரைத்தே
மீண்டும் நீரிற்குள் மீட்கும்
ஞாயிறின் ஒளியில்
மிதந்திடும் பொற்கரைசல்
அந்திக்கடல்..

எத்துனை வெப்பத்திலும்
சிறு இடைவெளியொன்றில்
வந்து ஓயும் அந்த
தென்றலின் மெல்லிய
அரவணைப்பில் அத்துனை
வெப்பமும் மொத்தமாய்த்
தனிகிறது….

இத்துனை வெப்பத்திலும்
வேகிறதென்று பொய்க்கணக்குப் போடாமல் தன் குஞ்சுகளிற்குத்
தீனி தேடித் திரிந்து
இறைவனுக்களித்த ஒப்பந்தத்தை கச்சிதமாய் நிறைவேற்றும்
அந்த சிட்டுக்கும் ஓர்
இரசிகன்…

யுகங்கள் நவீனத்தின்
கடலிற்குள் புதையுண்டுள்ள
இந்த செக்கனிலும்
விருட்சகத்தின் விருந்தாளியாய்
சுற்றித் திரியும்
இந்த பட்ஷிகளைப்
பார்த்துப் பரவசமடையும்
விழிகளை நேசிக்கும்
மனிதர்களைக் காண
விளைகிறது இந்த
பச்சையுலகம்..
-நாஓஷி-

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க