வெளியே வெறும் தூரல்தான்
கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை
அது அவ்வளவுதான்
நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறது
நெருக்கமான ஒரு கதகதப்பு
இன்னும் கொஞ்சம்
உரக்கவே பேசு
முத்தம் கூட ஓர் மொழிதான்
நினைவுகளை சிறையிடாதே!
சுதந்திரமாய் பறக்கவிடு!
நீ எவ்வளவு தூரம் எறிந்தாலும்
அவை எப்போதுமே
உன் கால்களை சுற்றத்தான் விரும்பிக் கொண்டிருக்கும்
உலகின் மிகச்சிறந்த பொய்
‘காதல் என்பதெல்லாம் சுத்தப்பொய்’