நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

0
575

நீ என் இயல்புகளுக்கு
புறமானவள்!

எனது விழிகள் அழுது
கண்ணீர் வடிப்பதில்
உனக்கு அப்படியொரு ஆனந்தம்

எனக்கு
எக்கணத்திலும்
எவ்வகையிலும்
எந்தவொரு நலவும்
நேர்ந்திடக் கூடாதென
தினமும் இறைவனிடம்
பிரார்த்திக்கிறாய்…

உனது முன்னிலையில்
நான் சற்று புன்னகைத்திட்டால்
போதும்
பூகம்பம் நேர்ந்தாற் போல்
ஆடிப்போய் விடுகிறாய்

உனக்கு நானென்றும்
ஒரு மூலைக்குள் கைவிடப்பட்ட நாற்காலியாய்
உட்கார்ந்திருக்க வேண்டும்

அதில் நீ தினமும்
ஒவ்வொரு ஆணிகளாய் அறைந்து ஆனந்தங் கொள்ள வேண்டும்

அற்ப ஆசையாக இருப்பினும்
அதை என்னில் பரிசோதித்துப் பார்க்க
ஒரு வகையான அலாதி உன்னில்…

நீ ஒரு பெண்ணுள்ளம்
கொண்ட அரக்கி!

உனக்கு நான்தான்
பலியாடு!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க