” தோட்டம் “

0
443

” உன்னில் கரைந்த நான்
என்னில் உன்னை
உணர்ந்தது என்ன?

மண்ணில் கலந்தது நீர்,
தன்னில் சிலிர்த்து
நனைந்ததென்ன வேர்?

புரிந்தது! காய்ந்தது வேர்,
பாய்ந்தது நீர்,

வேரானேன் நான்,
நீரானாய் நீ!

என்னே! என் சிந்தனை ஓட்டம்!
காரணம் உன் பார்வை,  அது
தரும் ஊட்டம்,

ஆசை மழையாகி உன் விழி
வழி போடும் நோட்டம்,

அதில்தான் தழைக்குது,
என் மனமென்னும்
பூந்தோட்டம்!”

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க