தித்திக்கும் தேன் மொழியாள்!

1
2975

வழக்கொழிந்து போகுதடி என் தமிழ் – உணர்வில்
வலுவிழந்து வாடுதடி
வினை புரிந்து வாழுதடி – உலகில்
துணையின்றியே சாகுமோடி?

முதல் விதைந்த மொழியானதடி – என் தமிழ்
முக்கனி கொண்ட சுவையானதடி
இருள் அகற்றிய மொழியானதடி – செந்தமிழ்
இலக்கிய நதியின் விழியானதடி

நாகரீக மாயைக்குள் பலியானதடி – என் தமிழ்
நாத்திக வாதிகளால் குழிபோனதடி
நஞ்சு கொண்டோர் நெஞ்சுதனில் உளியானதடி – செந்தமிழ்
துளையிடும் உளியானதடி

காப்பியங்களும் காவியங்ளும்
காணாமல் போனதடி
இலக்கணமும் இலக்கியமும்
ஏட்டுச் சுரக்காய் ஆனதடி

ஔவையின் வார்த்தையெல்லாம் – இங்கு
(நிறு)வை ஆனதடி
கம்பனின் வாழ்க்கையெல்லாம் – இன்று
காணலாய் போனதடி

திருக்குறளின் குரல்வளை நசிக்கப்பட்டு
சகதியில் புதைந்து போனதடி
ஓலைச்சுவடிகள் தணலில் எரிக்கப்பட்டு
சந்நிதியில் சாந்தியானதடி

செந்தமிழே!
இழிவென்று எண்ணுவோர் உன்னையடி
எக்கணமும் சிந்தை செய்ததில்லையடி
இன்றுவரை அவர்கள் உன்னையடி
பலியென்றுதான் பலிக்கிறார்களடி

எனக்கு நீ என்றும் அன்னையடி
என் இதயம் உனக்கே சொந்தமடி
கவிவரிகளில் உன்னை வடித்தேனடி
காகித கிறுக்கல்களானாயடி…

3 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Induja
Induja
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உண்மைதான்.இப்போது தாய்மொழி மறந்து போதலே பேஷன் ஆகி விட்டது