கொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)

0
585
1800x1200_virus_3d_render_red_03_other-85523800

 

 

 

 

 

 

#கொரோனா டாக்குத்தர்மார் (பொழுதுபோக்குக்கு மட்டும்)

இப்ப உலகம்பூரா கொரோனா பீதியில நடுங்கிட்டு இருக்கு. இங்கயும் வீட்டுக்க இருத்திப் போட்டாங்கள். பொழுதுபோக்குக்கு இந்தப் phoneஅ நோண்டிட்டு இருந்தன். எந்த நேரமும் உத நோண்டிக் கொண்டிருந்தா கொரோனா வராம என்ன செய்யும் எண்டு சொல்லிக் கொண்டு கதவத் திறந்தா எங்க ஏரியா டாக்டரம்மா. பத்துப் பட்டம் வாங்கின ஆக்களுக்கு தெரியாத மருத்துவம் எல்லாம் அவாக்கு தெரியும். மனிசி கொரோனாக்கும் கொஞ்ச மருந்து சொல்லியிருக்கு. அப்ப தான் யோசிச்சன் இவாவப் போல கொஞ்ச பட்டம் பெறா டாக்டர்மார் சொன்ன மருந்துகள உங்களுக்கும் தெரியப்படுத்தினா பயன் பெறுவியள் எண்டு தான் இது.
முதல் ஏரியா டொக்டர்ல இருந்து தொடங்குவம் அது தானே மரியாதை.

1. ஒருநாள் மனிசி வேப்பம்பட்டையளோட வந்து எடியே பிள்ளை இத மூண்டு வேளையும் குடிச்சா கொரோனா கிரோனா ஒண்டும் கிட்டவும் வராது எண்டதோட போகாம ரெண்டு பட்டையும் தந்திட்டுப் போச்சு. பிறகென்ன கச்சேரி தான். ஆகா என்ன ருசி😋😋

2. இண்டைக்கு காலமை அடுத்த டிப்ஸோட வந்தா. எடி இந்தக் கொரோனாக்கு உறைப்பெண்டா ஆகாதாம். இனி பெடியளுக்கு நல்ல தூளப் போட்டுக் குடு. ஒண்டும் வராது. இதுக்கிடையில வெளிநாட்டில தூளக் குறையப் போட்டுச் சாப்பிட்டு அநியாயமா சனம் சாகுதுகள் எண்டு கவலைப்படவும் மறக்கேல ஆச்சி. இண்டைக்கு கண்ணாலயும் மூக்காலயும் ஒழுக்குத் தான்.
இனிக் கொஞ்ச பொது டாக்டர்மார்ட டிப்ஸ் உங்களுக்காக(அமெரிக்காக்கு கூட தெரியாதெண்டா பாருங்களேன்)

3. சத்தியமா இந்தப் பெருங்காயத்த இவ்ளோ நாளும் என்னத்துக்கு பாவிக்குறது எண்டு தெரியாம இருந்தன் இப்ப தான் தெரியும் இந்த ஐட்டம்(பெருங்காயம்) பொக்கற்றுக்குள்ள கிடந்தா கொரோனா பக்கத்து வீட்ட வரும், முன் வீட்ட வரும் மேல் வீட்ட வரும் கீழ் வீட்ட வரும் ஆனா உன்ர பக்கம் தல வச்சும் படுக்காதெண்டு.. தகவலறிந்த கடைக்கார கோபாலு பெருங்காயத்தை பதுக்கிட்டார் So Sad.

4. தாய்:- எடேய் வெயிலான ஏரியாக்களில  கொரோனா வராதாம் என்ன!
தந்தை:- ஓமப்பா 25பாகைக்கு மேலயெண்டா செத்திடுமாம்.
மகன்:- ஐயோ அப்பிடியெண்டா எங்கட உடம்பில அத விடக் கூடவப்பா வெக்கை அப்ப ஏன் மனுசருக்கு வருது சும்மா அலம்பாதைங்கோ.
தந்தை:- அது உடம்புக்க வந்தா உடம்பில இருக்கிற சத்தை எடுத்து strong ஆகிடுமடா.
மகன்:- ஒரு வேளை இருக்கும். எதுக்கும் அவன் சுமனை ஏசிய நிப்பாட்டிப் போட்டு இருக்கச் சொல்லுவம்.
(எடுத்து கொள்ள வேண்டிய டிப்ஸ் :-வெக்கை எண்டா கொரோனா வராது)

5. இதுக்குள்ள அரிசிமாவும் மஞ்சளும் கலந்து விளக்கு வச்சுக் கும்பிட்டா கொரோனா வராதெண்டு யாரோ ஒரு பெருமை பிடிக்காத டாக்குத்தர் பூசாரிட பெயருக்கு பெருமைய transfer பண்ணிட்டார். மறக்காம விளக்கு அணைய அத கரைச்சு வீட்டச் சுத்தி தெளிச்சு விடுங்கோ.

6. இது இப்ப தான் அமெரிக்க அதிபர் யோசிச்சு இருக்கார் எண்டாலும் எங்கட ஸ்பெசலிஸ்ற் டொக்டர் பின்னணில இருக்கார். இந்த கிருமிநாசினிய ஏன் வெளிய தெளிக்குறியள் ரெண்டு மூடி உள்ள இறக்குவமெண்டு யோசிக்கினம் பாப்பம் எவளவு தூரம் success எண்டு.

மேலும் சில சிறு குறிப்புக்கள்:-
7. வயசு குறஞ்ச ஆக்களுக்கு கொரோனா வராது.

8. சிக்கன் சாப்பிட்டா கொரோனா வரும்.

9. Phone பாத்தா 100% கொரோனா வரும்.

10. கோமியம் கொரோனாக்கு மணிச் சாமான்.

இதில சும்மா நக்கலா சொன்னாலும் வேப்பங்கசாயம் உடம்புக்கு நல்லது. எதிர்ப்புசக்தியக் கூட்டும். அதுக்காக அதக் குடிச்சா கொரோனா வராதெண்டில்ல உங்களுக்கு பாதிப்பில்லை ஆனால் நீங்கள் காவியாக இருக்கலாம்.  கோமியம் குடிச்சா என்ன நடக்குமெண்டு எனக்குத் தெரியாது ஆனா கொரோனாக் மருந்தில்லை.
இப்பிடி உங்க ஊர்ல சொன்ன மருந்துகளையும் சொல்லுங்கோ…

 

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க