காதல் தரும் வலி…

0
369
couple-crying-due-broken-heart-illustration_53876-43175-0d779c19

கண்டதும் ஆயிரம் பட்டாம்பூச்சி
பறந்து பரவசம் கொள்ள செய்யும்
காதல்…

கண்வழி நுழைந்து ,
கனவாய் நிறைந்து
நினைவுகள் எல்லாம் நீடித்து
நித்திரை தொலைக்க செய்யும்
காதல்…

யுகங்களையும் கணமாய் மாற்றி
களித்து இருக்க செய்து , ஈருடல்
ஓருயிராய் நிலைகொள்ளும்
காதல்…

கனவுகள் கண்முழித்து கொள்ள
கை நழுவி போகும் காதல் அது
கண்நிறைத்து களித்திருந்த
காலங்களை கயிறு கட்டி
இழுத்து செல்ல…

கோர்த்திருந்த கை அதுவே
குரல்வளை நெரித்து குழி தள்ளி
மண்மூடும் மணித்துளி தரும் வலி …

இதயம் எல்லாம் இன்பமாய்
இருக்க செய்திட்ட காதலே
இதயம் இறுக்கி இனிமேலும்
துடித்திடாதபடி முடக்கி செல்லும் வலி…

இணைந்தே இருந்திடுவோம்
என இறுமாப்பாய் இருந்திட்ட
இரு உயிரும், இரு வேறாய் விலகிச்செல்ல
விழி நிறைக்கும் தருணம் தரும் வலி,
அது விலகாது வாழ்க்கை முடியும் வரை
தொடரும் வலி…

கைகூடாது கலைந்துப்போன
காதல் தரும் வலி அது மூச்சிருக்கும்
ஒவ்வொரு நொடியும் மரணம் அதை
உணரச்செய்யும் வலியே…

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ
கோவை -35

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments