கண்ஜாடை செய்…

0
1514

‘ம்’ என்று ஒரு கண்ஜாடை செய்….
என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ
அத்தனையும் செய்கிரேன்

‘ம்’ என்று ஒரு கண்ஜாடை செய்….
இனி என்னால் இயலாத காரியம் என்று
எதுவுமே இராது

வானவில்லின் சாயம் பிளிந்து
சூரியனுக்கு உதட்டுச்சாயம் பூசுவேன்..
வின்மீன்களை திரட்டி எடுத்து
வெண்ணிலலவுக்கு நெற்றிச்சுட்டி சூட்டுவேன்..
மேகத்தை கொசுவம் பிடித்து
தென்றலுக்கு பட்டுப் புடவையாய் அணிவிப்பேன்..
கடல் நீரை தூர்வாரி பாலைவனத்தில்
காலமழை பொழிவிப்பேன்..

அதுமட்டுமல்ல,
நீ படுத்துறங்க வானை மடித்து
தலையனையாக்கித் தருவேன்..
உன் குளிரைப் போக்க சூரியனை இரவல் வாங்கி
சூடேற்றிவிடுவேன்..
உன் அச்சம் தீர்க்க
இரவிற்கு வர்ணம் தீட்டி ஓவியமாக்கி விடுவேன்..
‘ம்’ என்று ஒரு கண்ஜாடை செய்….

இன்னும் என்னால் எவ்வளவோ இயலும்…
அமெரிக்க அதிபராக வேண்டுமா?
ஆபிரிக்க குடியாக வாழ வேண்டுமா?
ஐவிரல் இழந்து அள்ளி உண்ண வேண்டுமா?
இல்லை, அறுசுவை அறிந்து உனக்கு சமைத்துப்போடத்தான் வேண்டுமா?
செய்கிறேன்…

எனதன்பு மகளே!
எல்லாவற்றுக்கும் நீ
‘ம்’ என்று ஒரு கண்ஜாடை செய் போதும்…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க