அவளும் உயரம் தொடட்டும்..

0
505
images-6a7ce77f

கனவுகள் சுமக்கும் கண்கள் அடுப்புப் புகையால் கலங்கியது. அவள் கண்ணும் களைத்தது அது காண முடியா உயரம் என்று…

அவள் உணரவில்லை தான் இவ்வுலகில் அவதரித்ததே சாதனை என்று…

அவளுக்கு சோதனைகளையே காட்டி வளர்த்து அவளின் சாதனையை சங்கடப்படுத்தும் சமூகத்தின் நோய் தீரும் எப்போதோ?

வாழ்வு எனும் அவள் நெடும்பயணத்தை அவளே தீர்மானிக்கும் காலம் எப்போதோ?

அவளை விட்டுவிடுங்கள் அவள் வாழ்க்கை பாதையை தீர்மானிக்க…

அவள் பலவீனமானவள் எனப் பொய்கள் பரப்புவது நன்றோ ?
அவள் நெஞ்சுரம் இல்லையேல் நீ பூமி தொட்டிருப்பது சந்தேகமே..

அவளை தடுக்க சட்டங்கள் இயற்றியது போதும்
வாழ்க்கை பெருங்கடல் கடக்க அவள் படகிற்கு இருக்கலாம் ஓர் துடுப்பாய்..

சமூகம் விதித்த கோளாறுகளான விதிகளை விட்டுவிடுங்கள் அவளும் கனவு காணட்டும் உயரம் தொடட்டும்..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க