அண்ணன்

1
97

 

 

 

தோழமையோடு 
தோள் கொடுத்தான், 
நான் 
துவண்டெழும் பொழுது… 

வல்லமையோடு 
வலிமை கொடுத்தான், 
நான் 
வீழ்ந்தெழும் பொழுது… 

பரிவோடு 
பாசம் கொடுத்தான், 
தனிமையில் 
நான் தவிக்கும் பொழுது.. 

அன்போடு 
அரவனைத்தான், 
என் மனம் 
உருகும் பொழுது…. 

போர்வையாக எனை 
அரவனைத்தான், 
குளிரில் 
நான் நடுங்கிய பொழுது, 

நண்பனாக 
நன்னெறிகள் தந்தான், 
நான் 
பாதை தவறிய பொழுது, 

தந்தையாக 
அறிவுரை தந்தான், 
தவறுகள் 
நான் செய்த பொழுது, 

அன்னையாக 
ஆறுதல் தந்தான், 
கண்ணீரில் 
நான் கலங்கிய பொழுது, 

சண்டைகள் பல 
வந்தாலும், 
அன்பின் 
ஆழம் குறைவதில்லை, 

பந்தங்கள் பல 
இருந்தாலும், 
என் 
அண்ணண் தான் 
என்றுமே எனக்கு 
முதல் பந்தம்!!!!..

 

 

 

3 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Shafiya Cader
Shafiya Cader
12 days ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice