பூனை

0
4988

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன.

பூனைகள் பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால், அவைகளை பொதுவாக வீட்டில் வளர்த்து வணங்கினர். பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும்  சேர்த்து  எகிப்தியர்கள் புதைத்துள்ளனர். அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டது.

பூனைகள் பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும். பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது.

  • மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தம் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகளின் உடல் நுழையும். முன்னங்கால்களிலில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் பூனைகள் கொண்டு இருக்கும்.
  • பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளை சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும்.
பூனை வகைகள்
  • காட்டுப்பூனை
  • வீட்டுப்பூனை
  • ஆசிய தங்க நிறப் பூனை
  • இந்தியப் பாலைவனப் பூனை
  • சிறுத்தைப் பூனை
  • லின்க்ஸ் பூனை
  • பல்லா பூனை
  • பளிங்குப் பூனை
  • மீன்பிடிப் பூனை
cat

பூனை வளர்ப்பு 10,000 ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆப்ரிக்கர்களே பூனைகளை பழக்கப்படுத்தினர். ஆரம்பத்தில் எலிகள் உண்பதற்காகவே பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டன. பின்னர் அவை மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

பூனைகள் பழகும் முறை பூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தனது அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசி தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்து கொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக் கொள்வதும் உண்டு.

பூனைகளின் தோற்றம்

கறகால் பூனையின் ஒரு தனித்துவமான அம்சம் அதன் சுமார் 4.4 சென்டிமீட்டர் (1.75 அங்குள) முக்கோண வடிவ நீண்ட காதுகள் ஆகும். இந்த காதுகளின் முனையில் கொத்தான முடிகள் காணப்படும். இதற்கு நீண்ட கால்கள், குறுகியவால் போன்றவை காணப்படும். உடல் முழுவதும் செந்நிற சாம்பல் நிறமும் வயிற்றுப் பகுதியில் மங்கலான மஞ்சள் அல்லது வெள்ளை நிறமும் கொண்டிருக்கும்.

பூனைகளின் உணர்வுகள்

பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் சிறந்த கேட்கும் திறனைக் கொண்டுள்ளதுடன் அவற்றால் பரந்த அளவிலான மீடிறன் கொண்ட ஒலிகளையும் கேட்க முடியும். இவற்றால் மனிதன், நாய் என்பவற்றை விட உயர் சுருதியினாலான ஒலிகளைத் தெளிவாகக் கேட்க முடியும்.

பூனைகளின் இயல்பு

பூனைகள் இயல்பாக மாமிசப்பட்சிகள் ஆகும். சிறிய வகை பாலூட்டிகளை வேட்டையாடுவதில் கைத்தேர்ந்தவை. சிறிய தூரம் மட்டுமே வேகமாக இறையை விரட்டி சென்று துரத்தும் திறன் பெற்றவை.

பூனைகள் தனிமை விரும்பிகளாகும். எனவே நாய்கள், சிங்கங்கள் போல் அல்லாமல், புலிகள், சிறுத்தைகளைப் போல இனத்துடனும், மனிதர்களிடமும் தனித்தே இருக்கும். நாய்கள் போன்று சிறப்பு கவனங்களை பூனைகள் எதிர்பார்ப்பதில்லை. பூனைகள் அதிகம் விளையாடும் திறன் பெற்றவை. அவை விளையாடுவதே அவற்றை வேட்டைகாரர்களாக மாற்றுகிறது.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க