வானும் மண்ணும் நம் வசமே – தொடர் 01

0
698

 

 

 

 

வானும் மண்ணும் நம் வசமே
(தன்முனைக் கவிதைகள்)

நஸீரா எஸ்.ஆப்தீன் BA, MA ( Pub. Administration ) BA,
ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்
ஏறாவூர், இலங்கை.

விரித்த புத்தகம்
மூடப் படுகின்றது.
காட்சி மாற்றத்திற்காக
இமைகள் திரையிட்டதால்.

***

ஒன்றை யொன்று
துரத்திக் கொண்டேயிருக்கின்றன.
காதல் வயப்பட்ட
வண்ணத்துப் பூச்சிகளிரண்டு.

***

நுளம்புப் பூச்சிகளுக்கும்
அறிவு பெருகி விட்டன.
கற்பவர்களின் இரத்தம்
உடம்பினுள் ஓடுவதால்.

***

இரவு பகலாய்க்
கதறி அழுகின்றது.
இணையை இழந்த
சிட்டுக் குருவியொன்று

***

ஓடுகின்ற பஸ் வண்டியை
மெல்ல எட்டிப் பார்க்கின்றது.
இருண்ட மேகத்துள்
மறைந்திருந்த நிலவு.

***

அகன்ற பெரு வீதியில்
சிதைந்து கிடக்கின்றன.
போட்டி போட்டுப் பயணித்த
இரண்டு பேரூந்துகள்.

***

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க