தற்கொலை (That கொலை)

0
1640

“யோவ் யாருயா முதல்ல பார்த்தது” காரசாரமாய் கடுமையாக தொனித்தது கான்ஸ்டபள் அழகேசனின் குரல்,

“சார் நான் தான் சார்” என்றான் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தவன்,

உயரமான தோற்றம் தடிப்பான மீசை அவன் அணிந்திருந்த ஆடை அவனை ஒரு காவலாளி என அடையாளம் காட்டியது,

“நீ எதுக்காக மொட்டை மாடிக்கு போன” என்றார் அழகேசன்,

“வாரா வாரம் டாங்க கிளீன் பண்றதுக்காக மொட்டை மாடிக்கு போவாரு சார்” என்றார் இன்னொருவர்,

அளவான உயரம் பகட்டான கோட்சூட் ஆடை அலங்காரம், மாநிறம் சற்றே தொந்தியாகிப்போன வயிறு என்று மேனேஜருக்கு உரிய அத்தனை தகுதியும் அவருக்கு இருந்தது,

“நீங்க தான் இந்த ஹோட்டல் மேனேஜரா” என்றார் அழகேசன்,

“ஆமா சார்” என்றார் அந்த மனிதர்,

சற்று நேரத்திற்கெல்லாம் ஆறடி உயரமும் வாட்டசாட்டமான உடற்கட்டும் தடிப்பான மீசையும் நன்கு சவரம் செய்த கன்னங்களும் என கம்பீரமான ஒருவர் விரைவாக உள்ளே வந்தார்,

“இதோ ஐயாவே வந்திட்டாரே” என்ற அழகேசன் பக்குவமாக தன் கையை மடக்கி நெற்றி ஓரத்தில் வைத்து சல்யூட் செய்தார், மெதுவாக தலையை அசைத்து விட்டு அழகேசனின் சட்டையில் திறந்திருந்த பட்டனை சுட்டி காட்டினார் புதிதாக உள்நூழைந்த சக்திவேல்,

“சாரி சார்” என்றார் அழகேசன்,

“எதாவது தகவல் கிடைச்சுதா என்றார்” சக்தி வேல்,

“நோ சார் தகவல் ஏதும் கிடைக்கல இதோ இந்த செக்கியூரிட்டி தான் முதல்ல பார்த்திருக்கான், மொட்டை மாடியில இருக்கிற டாங்க்ல தான் பாடி கிடைச்சுது, கன்பார்மா சூசைட்டா தான் இருக்கும்னு தோணுது சார்” என்றார் அழகேசன்,

“எதை வைச்சு சூசைட்னு சொல்றீங்க” என்றார் சக்திவேல்,

“சிசிடிவி புட்டேஜ் பார்த்தீங்கனா உங்களுக்கே புரியும் சார், அவனா தான் கதவை திறந்துக்கிட்டு மேல ஏறி போயிருக்கான்” என்றார் அழகேசன்,

“சார் இங்க தங்கியிருக்கிறவங்களை தவிர வேற யாரும் மாடிக்கு போக முடியுமா அதாவது ரூம்ஸ் இருக்கில்ல அந்த மாடிக்கு” என்றார் சக்திவேல்,

“முடியும் சார் ஆனா கீழ றிசப்ஷன்ல பதிவு பண்ணிக்கிட்டு தான் போக முடியும்” என்றார் மேனேஜர்,

“இஸ் இட் அப்படினா யாராவது இன்னைக்கு காலையில யாரையாவது மீட் பண்ணா வந்தாங்களானு செக் பண்ணீங்களா?” என்றார் சக்தி வேல்,

“செக் பண்ணோம் சார் ரவினு ஒருத்தர் ராகவன்னு ஒருத்தரை மீட் பண்ண வந்திருக்காரு” என்றார் மேனேஜர்.

“ராகவன் என்கிறது யாரு” என்றார் சக்தி வேல்,

“சார் நான் தான்” என்றார் ஒருவர்,

“ரவி உங்களை தான் மீட் பண்ண வந்தாரா?” என்றார் சக்தி வேல்,

“ஆமா சார் என்னை தான் மீட் பண்ண வந்தாரு” என்றார் ராகவன்,

“சார் அது தான் கிளியரா தெரியுதே தற்கொலைனு அப்புறம் என்ன சார்” என்றார் அழகேசன்,

“அழகேசன் உங்க மொபைல கொடுங்க என் மொபைல்ல சார்ஜ் இல்லை” என்றார் சக்தி வேல்.

“இந்தாங்க சார்” என்ற அழகேசன் மொபைலை நீட்டினார்,

அதை வாங்கி எஸ்.பிக்கு அழைப்பை ஏற்படுத்திய சக்திவேல்

“சார் நான் இன்ஸ்பெக்டர் சக்தி வேல்,” என்றார்.

“சொல்லுங்க சக்திவேல் ஸ்பார்ட்க்கு போய்ட்டீங்களா? என்ன மாதிரி நிலவரம்” என்றார் எஸ்பி

“ஆ வந்திட்டேன் சார் தற்கொலை மாதிரி தான் தெரியுது, போமாலிட்டீஸ் முடிச்சிட்டு நாளைக்கு காலையில றிப்போர்ட்ட சப்மிட் பண்ணீடுறன்” என்றார் சக்தி வேல்,

“ம் ஓகே சக்தி வேல்” என்றார் எஸ்பி

“தேங்க்யூ சார்” என்று சொல்லி ஃபோனை கட் செய்தனர் சக்திவேல்,

“கேன் ஐ சீ தட் சிசிடிவி புட்டேஜ்” என்றார் சக்தி வேல்,

“கண்டிப்பா சார்” என்றார் மேனேஜர்,

சக்திவேல், அழகேசன் மற்றும் மேனேஜர் என மூவரும் கீழே இருந்த ஆப்பரேட்டிங்க் ரூமை அடைந்தார்கள்,

“சார் இது தான் அந்த புட்டேஜ்” என்றான் ஆபரேட்டராக அமர்ந்திருந்த வாலிபன், அளவுக்கதிகமான உயரம் ஒல்லியான உடல் வாகு மாநிறம் என அமைந்திருந்தான் அந்த வாலிபன், அவனின் அளவுக்கதிகமான உயரம் காரணமாக வளைந்து தான் இருக்கையில் அமரவேண்டியிருந்தது அவனுக்கு,

“உன் பெயரென்ன” என்றார் சக்திவேல்

“ராஜா” என்றான் அவன்

“அந்தாளு கதவை திறந்து மொட்டை மாடிக்கு போறப்போ நீ ஸ்க்ரீன்ல பார்க்கலயா?, நீ என்ன பண்ணீட்டு இருந்த” என்றார் சக்தி வேல்,

“சார் அந்த டைம் இருந்த ஆபரேட்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டான், இவன் வேற ஆளு, நாம வாறப்போ அவன் மயக்கத்தில தான் இருந்தான் நாம தான் தண்ணி தெளிச்சு எழுப்பினோம்” என்றார் அழகேசன்,

“அவன் எங்கே” என்றார் சக்திவேல்,

“அதோ வெளிய உட்கார்ந்திருக்கான்” என்றார் அழகேசன்,

அவனை நோக்கி சென்றார் சக்திவேல்

கட்டையான உருவம் கறுப்பான தோல் சற்று முரட்டு தனமான முகம் என்று இருந்தான் அவன்

“உன் பெயர் என்ன” என்றார் சக்திவேல்

“பரஞ்சோதி” என்றான் அவன்.

“எதை பார்த்து மயக்கம் போட்டு விழுந்த” என்றார் சக்தி வேல்,

“சார் அவருக்கு பிபி இருக்கு அதால தான் அடிக்கடி இப்படி மயக்கம் போட்டு விழுந்திடுவாரு, அப்படி தான் இன்னைக்கும் மயக்கம் வந்திருக்கும்” என்றான் ராஜா,

பரஞ்சோதியும் ஒப்புக்கொள்வது போல தலையை அசைக்க

“ம்ம்” என்று தலை அசைத்து விட்டு “சரி வாங்க புட்டேஜை பார்க்கலாம்” என்றார் சக்திவேல்,

கம்பியூட்டர் ஸ்க்ரீனில் சற்றே பருமனான அந்த மனிதர் மெதுவாக நடந்து கதவருகே சென்று அதன் இடது புறமிருந்த ஒரு நம்பர் லாக்கில் நான்கு இலக்கங்களை அழுத்தி கதவை திறக்க செய்து உள்ளே நுழைகிறார், அவர் முகத்தில் பெரும் பதற்றம் இருந்ததை சக்திவேல் கவனிக்க தவறவில்லை,

“சார் இந்த பாஸ்கோர்ட் எல்லாருக்கும் தெரியுமா?” என்றார் சக்திவேல்.

“நோ சார் எனக்கும் செக்கியூரிட்டிக்கும் இன்னும் நிர்வாகத்தில இருக்கிற சிலருக்கு மட்டும் தான் தெரியும் மற்றவங்களுக்கு மேல போக எந்த தேவையும் இல்லாததனால சொல்றதில்லை” என்றார் மேனேஜர்,

“சோ..” என்ற படி செக்கியூரிட்டியை திரும்பி பார்த்தார் சக்திவேல்

“சார் நான் எதுவும் பண்ணல சார் பிள்ளை குட்டி காரன் சார் என்மேல சந்தேகப்படாதீங்க சார்,” என்று கதறினான் செக்கியூரிட்டி.

“நான் எதுவும் சொல்லவே இல்லையே” என்றார் சக்திவேல்,

“உங்க பார்வையை பார்க்கவே பயமா இருக்கு சார்,” என்றான் அவன்,

மெதுவாக தலையை அசைத்துக்கொண்டே

“நேற்று நைட் ரூம் சர்விஸ்க்கு போனது யாரு” என்றார் சக்திவேல்

“சார் நான் தான் என்றான்” ஒருவன்

அளவான உயரம் அளவான பருமன் சற்றே பொதுநிறம் குறுகிய தாடி என நின்றான் ஒரு வாலிபன்,

“உன் பெயரென்ன” என்றார் சக்தி வேல்

“அமல்” என்றான் அவன்

“எத்தனை வருசமா இங்கே வேலை பார்க்கிற” என்றார் சக்திவேல்.

“ஐந்து வருசமா” என்றான் அமல்,

“நேத்து நைட் நீ போகும் போது அவரு எப்படி இருந்தாரு” என்றார் சக்திவேல்.

“போனை வைச்சு யார்க்கூடவோ கத்திக்கிட்டு இருந்தாரு ரொம்ப டென்ஷனா இருந்தாரு சார்” என்றான் அமல்,

சக்திவேல் அழகேசனை நோக்கி
“செத்துபோனவரை பற்றி டீடெயில்ஸ் கிடைச்சுதா” என்றார்.

“ஆ கிடைச்சுது சார், அவரோட பெயர் அருளமுதன், ஒரு ஐடி கம்பனியில மேனேஜரா ஒர்க் பண்றாரு, ஒரு மீட்டிங்க்காக மூணு நாளா இங்க தான் தங்கியிருக்காரு, நாளைக்கு காலையில மீட்டிங்க் அட்டென்ட் பண்ணியிருக்கணும்” என்றார் அழகேசன்,

“ஐடி கம்பனியா அப்போ டென்ஷனா தான் இருந்தாகணும். யாரோ ஒருத்தங்க அந்தாளுக்கு பாஸ்கோர்ட் பற்றி சொல்லியிருக்கணும் இல்லைனா கரெக்ட் பாஸ்கோர்ட் போட்டு போயிருக்க முடியாது இல்லையா” என்றார் சக்தி வேல்,

“எஸ் சார்” என்றான் அழகேசன்,

“இது எத்தனை மணி புட்டேஜ்” என்றார் சக்திவேல்.

“எட்டு மணி புட்டேஜ் சார்” என்றான் ராஜா.

“அதுக்கு முந்தின புட்டேஜை காட்டுங்க” என்றார் சக்திவேல்.

சில நிமிடங்கள் கணினியில் துளாவிய ராஜா சற்றே பதட்டமாக

“சார்” என்றான்.

“என்ன ஆச்சு ராஜா” என்றார் சக்தி வேல்,

“7:20 டூ 7:55 வரை புட்டேஜ் டெலிட் ஆகி இருக்கு சார்” என்றான் ராஜா,

“வட்” சற்றே வியப்புடன் தொனித்தது சக்திவேலின் குரல்,

“ஆமா சார் புட்டேஜ் யாரோ டெலிட் பண்ணியிருக்காங்க” என்றான் ராஜா,

“சோ 7:20 டூ 7:55 க்குள்ள தான் அந்த கொலை காரன் மொட்டை மாடியில போய் மறைஞ்சிருந்திருக்கணும், அப்புறம் இந்தாளுக்கு போன் பண்ணி மிரட்டி வரவைச்சிருக்கணும், அதுக்கப்புறம் அவரை கொலை பண்ணி அந்த டாங்க்ல போட்டிருக்கணும், அதே 7:20 டூ 7:55 க்குள்ள யாரோ ஒருத்தர் உள்ளே நுழைஞ்சு அந்த பரஞ்சோதியை மயக்கமடைய செய்திருக்கணும் அப்புறம் அந்த புட்டேஜை டெலிட் பண்ணிட்டு, அந்த கொலைகாரன் கொலை பண்ணிட்டு வெளிய வாற வரைக்கும் வெயிட் பண்ணி அந்த புட்டேஜையும் டெலிட் பண்ணீட்டு வெளிய போயிருக்கணும், என்னோட ஊகம் சரினா 8:30 டூ 9:00 புட்டேஜ் இருக்காது,” என்றார் சக்தி வேல்,

“சார் யூ ஆர் ப்ரிலியன்ட் 8:38 டூ 9:05 புட்டேஜ் டெலிட் ஆகியிருக்கு” என்றான் ராஜா.

“ஆமா ஆனா அவன் புட்டேஜ் டெலிட் பண்ணீட்டு இந்த ஆப்பரேட்டிங்க் ரூமை விட்டு வெளிய போற புட்டேஜ் கண்டிப்பா ஆப்பரேட்டிங்க் ரூமுக்கு முன்னாடி உள்ள கேமிரால சேவ் ஆகியிருக்கும் அதை அவனால அழிக்க முடியாதுல” என்றார் சக்திவேல்,

“ஆமா சார்” என்றபடி 9:05 டூ 10:15 புட்டேஜை திரையில் ஓடவிட்டான் ராஜா,

ஆனால் அந்த நேர இடைவெளிக்குள் யாரும் அந்த ரூமைவிட்டு வெளியே சென்றதாக தெரியவில்லை சக்திவேலின் முகத்தில் ஒரு வித ஏமாற்றம் படர்ந்தது, அதை மறைத்துக்கொண்டு “அந்தாளு தங்கியிருந்த ரூம் எது?” என்றார் சக்திவேல்.

“ரூம் நம்பர் 606 சார்” என்றார் மேனேஜர்,

“சரி வாங்க” என்ற படி ரூமை நோக்கி சென்றார் சக்திவேல்,

அங்கிருந்த வெறும் காஃபி கப்பை சுட்டிக்காட்டிய சக்திவேல் “காலையில யாரு காஃபி கொண்டு வந்தது,” என்றார்.

“சார் நான் தான்” என்றான் அமல்.

“எதாவது வித்தியாசமா பார்த்தீங்களா அமல்” என்றார் சக்திவேல்

“நோ சார் வழக்கம் போல டென்ஷனா தான் இருந்தாரு” என்றான் அமல்,

“இங்க இந்த ரூமுக்கு முன்னாடி ரூம்ல தங்கியிருக்கிறது யாரு ரூம் நம்பர் 607” என்றார் சக்திவேல்.

“சார் நான் தான்” என்றார் நாம் முன்னரே பார்த்த ராகவன்,

“மிஸ்டர் ராகவன் செத்து போனவரை பற்றி ஏதாவது தெரியுமா” என்றார் சக்திவேல்.

“சார் நாங்க எல்லாருமே ஏதாவது பிஸினஸ் விஷயமா இரண்டு நாளோ மூணு நாளோ வந்து தங்கிறோம், இதுல பக்கத்து ரூம்ல இருக்கிறவனை கவனிக்க ஏது சார் நேரம்” என்றார் ராகவன்,

அவர் பேச்சும் வாஸ்தவம் தான் என்பது போல தலையை அசைத்தார் சக்திவேல். பின்னர் ஏதோ சிந்தித்த படியே நடந்து மொட்டை மாடியில் அந்த நீர்த்தாங்கி இருந்த இடத்தை அடைந்தார்,

“நீங்க வந்து பார்க்கும் போது டாங்க் மூடி இருந்துதா திறந்திருந்துதா” என்றார் சக்திவேல்

“மூடியிருந்தீச்சு சார்” என்றான் செக்கியூரிட்டி,

“உள்ளே போய் புட்டேஜ் டெலிட் பண்ணியிருக்கான் ஆனா வெளிய வரல இது எப்படி சாத்தியம், ஒருவேளை டெக்னிக்கல் பால்ட்டா இருந்தா கூட சரியா எப்படி அந்த டைமிங்க்ல டெலிட் ஆகும், சரி தற்கொலைனே வைச்சாலும் தற்கொலை பண்றவன் மூடியையும் மூடிட்டு தான் தற்கொலை பண்ணுவானா, ராஜா எதுக்காக முந்திக்கிட்டு பரஞ்சோதிக்கு பிபி இருக்குனு சொல்லணும் ராஜாக்கும் இதுக்கும் சம்பந்தமிருக்குமா, ஆனா ராஜா தான் உள்ளேயிருந்து வெளிய வரலயே, ஒருவேளை அப்புறமா வந்து டெலிட் பண்ணியிருந்தாலும் நமக்கெப்படி தெரியும் ஏன்னா பரஞ்சோதி மயக்கமான அப்புறம் ராஜா தான் ஆப்பரேட்டிங்க் ரூம்ல இருந்தான், சோ ராஜா தான் பண்ணியிருப்பானா, அப்படினா அவனுக்கு வழக்கமா செக்கியூரிட்டி மேலே போய் டாங்க் கிளீன் பண்ற டைம் தெரிஞ்சா அந்த டைம் புட்டேஜ் பார்த்தா அவரு என்ன பாஸ்கோர்ட் போடுறார்னு பார்க்க முடியும்ல, பாஸ்கோட்டும் கிடைக்கும்ல, அப்போ” என்று சிந்தித்த சக்திவேலின் கண்ணில் டாங்கிற்கு அருகில் கிடந்த ஏதோ ஒரு பொருள் பட்டது,

உடனே அவர்களை நோக்கி திரும்பி
“ராஜா அமல் நீங்க இரண்டு பேர் மட்டும் இங்கேயே இருங்க, அழகேசன் நீங்க கீழே போய் பரஞ்சோதியையும் கூட்டீட்டு வாங்க, மற்றவங்க வெளிய போகலாம்”
என்றார்.

சில நிமிடங்களில் பரஞ்சோதியுடன் அழகேசன் வந்திருந்தார்,

“ராஜா 7:25 டூ 7:55 அன்ட் 8:38 டூ 9:05 அந்த டைமிங்க்ல நீங்க எங்கேயிருந்தீங்க” என்றார் சக்திவேல்,

“சார் எனக்கு 9:00 க்கு தான் டியூட்டி சோ 9:00 தான் ஹோட்டல்க்கு வந்தேன்” என்றான் ராஜா,

“இஸ் இட் ஹோட்டல்க்கு வெளிய சிசிடிவி இருக்கா” என்றார் சக்திவேல்,

“ஆ இருக்கு சார்” என்றான் பரஞ்சோதி,

“ம் செக் பண்ணிடலாம்” என்றார் சக்தி வேல்,

“அமல் எதுக்காக அந்தாளை கொலை பண்ணீங்க” என்றார் சக்திவேல்,

“சார் மைன்ட் யூர் வேர்ட்ஸ் என்ன பேசுறீங்கனு தெரிஞ்சு தான் பேசுறீங்களா, நான் ஒண்ணும் கொலை பண்ணல” என்றான் கோபமாக

“அமல் நான் தெளிவா தான் இருக்கன் நீங்க தான் குழம்பி போயிருக்கீங்க, ஏன் கொலை பண்ணீங்கனு சொல்லப்போறீங்களா இல்லை விசாரிக்க வேண்டிய விதத்தில விசாரிக்கணுமா” என்றார் சக்திவேல்,

“இங்க பாருங்க சார் நான் கொலைலாம்..” என்று ஆரம்பிக்கவும்,

“சட்ஆப் எனக்கு எல்லாம் தெரியும், அவனை நீ தான் கொலை பண்ணினா, உங்க ஹோட்டல்ல இருக்கிற எல்லா ரூம் பாய்ஸ் உம் பாக்கெட்ல ஒரு சிகப்பு லோகோ மாதிரி ஒண்ண பின் பண்ணியிருக்காங்க, உன் பாக்கெட்ல இருக்க வேண்டிய அந்த சிகப்பு நிற லோகோ எங்க, உன் கழுத்துக்கிட்ட என்ன அழுக்கு படிஞ்சிருக்கு” என்றார் சக்திவேல் கடுகடுத்த குரலில்,

“சார் அது” என்று பதறினான் அமல்.

“நான் சொல்லவா, உன் லோகோ இதோ இந்த டாங்க பக்கத்தில இருக்குது பார்” என்றார் சக்தி,

எதுவும் பேசாமல் பிரமை பிடித்தது போல் நின்றான் அமல்

“இப்போ நீங்க சொல்லுங்க மிஸ்டர் பரஞ்சோதி எதுக்காக புட்டேஜை டெலீட் பண்ணீட்டு மயங்கி விழுந்த மாதிரி நடிச்சீங்க” என்றார் கடுமையான குரலில் சக்திவேல்,

“சார் அது சார்” என்று நாக்குழறி புலம்பினான் பரஞ்சோதி.

“இப்போ சொல்லப்போறியா இல்லையா?” என்று அமலை அதட்டினார் சக்தி,

“சார் என் பேரு அமல், நாங்க வளர்ந்தது எல்லாமே கிராமத்தில தான், எனக்கு ஒரு தங்கைச்சி இருக்கா அவ பேரு கமலி, நான் தான் வேலைக்கு போய் சம்பாதிச்சு அவளை படிக்க வைச்சேன், அவளும் நல்லா படிச்சு ஒரு ஐடி கம்பனியில ஒர்க் பண்ணீட்டு இருந்தா, ஒரு நாள் திடீர்னு அவ.. அவ..” என்று கூறி விம்மினான் அமல்,

“என்ன ஆச்சு அமல்” என்றார் சக்தி,

“அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார், என்ன காரணமோ தெரியல, ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நாள் அவ ரூம்ல ஒரு லெட்டரும் போட்டோவும் இருந்தீச்சு, எடுத்து பார்த்தேன், அந்த போட்டோ இன்னைக்கு செத்துப்போனானே அவனோடது தான், அவனும் அதே ஐடி கம்பனியில தான் ஒர்க் பண்ணீட்டு இருந்தான், அவன் என் தங்கைச்சியை தப்பு தப்பா பேசி…” என்று அழ ஆரம்பித்தான்,

“என்வாயால அதை சொல்ல முடியல சார், ஒரு நாள் அவ குடிக்கிற கூல் றிங்க்ல மயக்கமாத்திரையை கலந்து.. தப்பு தப்பா போட்டோ எடுத்து வைச்சு அதை காட்டி டெயிலி அவளை மிரட்டியிருக்கான், அவன் டார்ச்சர் தாங்காம என் தங்கைச்சி..” என்று கூறி கதறி அழுதான்,

“அப்புறம் மூணு நாளைக்கு முன்னாடி அவனை அந்த நாயை பார்த்தேன் அதுவும் நான் ஒர்க் பண்ற ஹோட்டல்லயே, அவனை கொல்றதுக்கு பிளான் பண்ணோம், அவனோட இரகசிய டீலிங்க்ஸ்லாம் இருக்கிற ஒரு முக்கியமான ஃபைல அவன் கிட்ட இருந்து திருடினோம், அது வேணும்னா மொட்டை மாடிக்கு வானு கால் பண்ணி மொட்டைமாடி பாஸ்கோர்டையும் சொன்னோம், அவனும் வந்தான், நானே என் கையால அந்த நாயோட கழுத்தை நெரிச்சு கொண்ணேன் டாங்க்லேயும் தூக்கி போட்டேன் அந்த போராட்டத்தில என் பாக்கெட்ல இருந்த லோகோ அறுந்து விழுந்திடிச்சு, எனக்கு வேற வழி தெரியல சார் அவனை கொண்ணிட்டேன் என் வேலை முடிஞ்சிடிச்சு இனி தாராளமா என்ன அரெஸ்ட் பண்ணிக்கோங்க சார்” என்று முடித்தான் அமல்,

“சார் அப்படினா அந்த புட்டேஜ் டெலிட் பண்ணது” என்றார் அழகேசன்,

“பரஞ்சோதி தான் இல்லையா பரஞ்சோதி” என்றார் சக்தி,

“ஆமா சார் நானும் அமலும் சின்ன வயசில இருந்தே பிரண்ட்ஸ் அவ எனக்கும் தங்கைச்சி தான் சார்” என்று கூறி கண் கலங்கினான் பரஞ்சோதி

“பரஞ்சோதியை எப்படி கண்டுபிடிச்சீங்க சார்” என்றார் அழகேசன்,

“அவனோட பதற்றம் காட்டி கொடுத்தீச்சு” என்றார் சக்தி,

“அப்படினா பாஸ்கோர்ட்” என்றான் அழகேசன்,

“செக்கியூரிட்டி மேல போகும் போது யூஸ் பண்ற பாஸ்கோர்ட்ட சிசிடிவில பார்த்தா தெரிஞ்சிட போகுது” என்றார் சக்திவேல்

“அப்படினா கொலை கன்பர்மாகிடிச்சு” என்றான் அழகேசன்,

பெருமூச்சு விட்ட சக்திவேல்

மெதுவாக அவ்விடத்தை விட்டு சிந்தனையுடனே நகர்ந்தார்,

முற்றும்

முடிவு உங்கள் கைகளில் சக்திவேல் என்ன பண்ணுவாரு….?!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க