காதல் தந்த காயங்களோடு..

0
602

 

 

 

 

உன் காதல் தந்த காயங்களோடு
கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது
என் இதயம்

புவியீர்ப்பு விசை போல்
என்னுள் என் காதல் இருப்பதால் உன்
திசை நோக்கி உன் நினைவுகளை எறிந்தும்
நீ தந்த காயங்களையும் சேர்த்தே
என் விசை என்னோக்கி ஈர்க்கிறது !

என்னை சிறையிட்டு கொழுத்திய
சில வினாடிகளுக்கும்
எனக்கு சிறகிட்டு உயர்த்திய சில கனவுகளுக்கும்
விலங்கிட்டு வாழ நினைக்கிறேன்
விலகிச் சென்ற உன்னால்
நீ விரும்பித் தந்த வினாடிகளும் சில நிமிடம்
விசமாகிச் செல்வதால் !

உன் காதல் தந்த காயங்களோடு
என் காலம் தாண்டிச் சென்று
கனவிலேனும் கண்ணீரின்றி
வாழ நினைக்கிறேன்
நிறைவேறா ஆசையும் நிவர்த்தியாகும்
என்ற நிலையான மனதோடு… !!

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க