அறிவாயா?

0
82
bhavanisre_20210216_180701_0-487061a3

அவள்!
கண்கள் காமம் ஆற்பரிக்கும்
கயல்விழி காம்பினில் பூப்பறிக்கும்
கனியிடைச் சாற்றினில் தேன் சுரக்கும்
கருங்குழல் கழுத்தினில் குடியிருக்கும்

அவளின்!
காதலில் கரும்புகள் புளிக்கும்
காத்திருத்தலில் பாகலும் இனிக்கும்
கனவுகளிடையில் கலர் பூக்கள் பூக்கும்
காணல் மழையில் குடைக்காலான் பிறக்கும்

அவளால்!
காலை மேகம் கண்ணீர் வடிக்கும்
காளை மாடு வெண்பால் கறக்கும்
காலம் மாறி இராச் சூரியன் எரிக்கும்
கதர் உடையில் பட்டுமேனி புடைக்கும்

அறிவாயா?

 

 

 

 

 

0 0 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க