ஹைப்பர்சோம்னோலன்ஸ் (Hypersomnolence)

0
375

 

 

 

 

 

ஹைப்பர்சோம்னோலன்ஸ் (Hypersomnolence):

இந்த வார்த்தை நம்மில் பலருக்கு புதிதாக தோன்றலாம். ஆனால் இந்த கட்டுரையை படிக்கும் சிலருக்கு தனக்கு நேரும் அறிகுறிகளை அல்லது தாம் அறிந்தவர்கள் இந்த அறிகுறிகளை வெளிப்படுத்துவதை உணரலாம் என நம்புகின்றேன்.

ஹைப்பர்சோம்னோலன்ஸ் என்பது ஒரு நபர் 7 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆரோக்கியமாள தூக்கத்திற்குப் பிறகும் குறிப்பிடத்தக்களவு தூக்கத்தின் உணர்வினை அனுபவிக்கும் ஒரு நிலையாகும்.

இந்த அதிகப்படியான தூக்கநிலையான  ஹைப்பர்சோம்னோலன்ஸ் இனை அதிகப்படியான பகல்நேர தூக்கம், அதிகப்படியான பகல்நேர சோம்பல் மற்றும் ஹைப்பர்சோம்னியா ஆகிய பிற சொற்களும் விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

ஹைப்பர்சோம்னோலன்ஸ் என்றால் என்ன?

பலர் தங்கள் வாழ்வில் பல்வேறு நேரங்களில் தூக்கமின்மையாகவோ அல்லது அதிக சோர்வாகவோ இருப்பதாக உணர்கின்றனர். மறுபுறம், ஹைப்பர்சோம்னோலன்ஸ் உள்ள ஒரு நபர் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட மணிநேரங்களுக்கு நன்றாக தூங்கிய பிறகும் தனது நாளில் தூங்க வேண்டிய அவசியத்தை உணர்கிறார். இந்த நிலையானது வேலையில் ஈடுபடும் மற்றும் கற்றலைத் தொடரும் ஒரு நபரின் திறன்களை பாதிக்கும் என்பதால் ஹைப்பர்சோம்னோலென்ஸ் சிக்கலான ஒரு நிலையாக கருதப்படுகின்றது. மேலும் இது வாகனம் ஓட்டும்போது அவர்களின் பாதுகாப்பையும் பாதிக்கக் கூடிய நிலையாக இருப்பதுடன் இந்த  ஹைப்பர்சோம்னோலன்ஸ் நிலையானது வேறு பிற அடிப்படை மருத்துவக் கோளாறுக்கான குறிகாட்டியாகவும் இருக்கலாம்.

பொதுவாக ஹைப்பர்சோம்னோலென்ஸின் அறிகுறிகள் ஒருவருக்கு 17 முதல் 24 வயதிற்குள் தொடங்கும். Psychosomatics இதழின் ஒரு கட்டுரையின் படி, இந்த நிலையானது ஆரம்பிக்கும் சராசரி வயது 21.8 ஆண்டுகள் ஆகும். இதனை ஆரம்பத்திலேயே அறிந்து சிகிச்சையளிக்காவிட்டால், இது ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தையே பாதிப்படையச் செய்யும்.

 

 

 

 

 

அறிகுறிகள்

ஹைப்பர்சோம்னோலன்ஸ் உள்ளவர்களுக்குஇ அதிகப்படியான தூக்கம் ஏற்படுவது இன்னுமொரு மருத்துவரீதியான பிரச்சினைகளோ அல்லது மருந்துப்பயன்பாடு என்பதோ காரணமாக அமைவதில்லை.

ஹைப்பர்சோம்னோலென்ஸின் பிரதான அறிகுறியானது ஒரு நபர் 7 மணிநேரம் தூங்கினாலும் அவரால் அதிக தூக்கத்தினை உணர முடியும். ஆமலும் ஹைப்பர்சோம்னோலென்ஸின் பிற அறிகுறிகளாக பின்வருவன அடங்கும்:

  • பகலில் பல முறை தூங்குவது
  • தூக்க உணர்வினை போக்க குறுகிய நேரம் உறங்குவது. ஆனாலும் தூங்கிய பின்னரும் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க முடியாதிருத்தல்
  • 9 மணி நேரத்திற்கு மேல் தூங்கினாலும் ஓய்வான உறக்க மனநிலை இருப்பதில்லை
  • தூக்கத்தில் இருந்து எழுந்திருப்பது கடினமாக இருத்தல்
  • எழுந்திருக்கும்போது குழப்பமாகவோ அல்லது போராடி எழுந்திருக்க வேண்டிய மனநிலையான உணர்வினை கொண்டிருத்தல்

இத்தகைய அதிக தூக்கமானது தனிநபர் ஒருவரின் வேலை, கல்வி அல்லது பிற தினசரி செயல்பாடுகளில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

காரணங்கள்

நமது மூளையே நமது உடல் இயக்கத்திற்கான அனைத்து வித கட்டளைகளையும் பிறப்பிக்கின்றது. அந்தவகையில் மூளையின் என்ன தொடர்புகள் ஹைப்பர்சோம்னோலன்ஸை ஏற்படுத்துகின்றன என்பதை அடையாளம் காண ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். மூளையின் வேதிப்பொருட்களின் அதிகரிப்பு மக்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அறியப்படுகிறது. இந்த அதிகரிப்பானது ஒரு தூக்க மாத்திரை போல் செயல்படலாம்.

ஹைப்பர்சோம்னோலென்ஸில் ஈடுபடும் குறிப்பிட்ட பொருள் அல்லது மூலக்கூறை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை என்றாலும், அது மூளையில் தூக்கத்தை ஊக்குவிக்கும் பொறுப்பான y-aminobutyric அமிலம் (GABA) என்ற பொருளுடன் தொடர்பு கொள்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். அறுவை சிகிச்சையின் போது ஒரு நபரை தூங்க வைக்க அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் அதே GABA பொருளில் வேலை செய்கின்றன.

 

 

 

 

 

 

ஹைப்பர்சோம்னோலென்ஸை பின்வரும் காரணிகள் உருவாக்க முடியும்.

  • மன அழுத்தம்
  • அதிகப்படியான மது அருந்துதல்
  • வைரஸ் தொற்றுக்கு முந்தைய வரலாறு
  • தலை அதிர்ச்சியின்  (Head trauma) முந்தைய வரலாறு
  • ஹைப்பர்சோம்னோலன்ஸ் பாதிக்கப்பட்ட குடும்ப வரலாறு
  • மனச்சோர்வு, துஷ்பிரயோகம், அல்சைமர் நோய் அல்லது பார்கின்சன் நோய் ஆகியவற்றின் மருத்துவ வரலாறு

ஆகியவை அறியப்பட்ட ஆபத்து காரணிகளாகும். மற்றும், இந்த நிலைக்கு சாத்தியமான பங்களிப்பாளர்கள் என்றாலும் வேறு சில அறியப்படாத காரணங்களும் ஹைப்பர்சோம்னோலன்ஸ் எற்படுவதற்கு இருக்கலாம்.

ஹைப்பர்சோம்னோலென்ஸுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக பின்வரும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் உதாரணங்கள் பின்வருமாறு:

ஆம்பெடமைன்
மீதில்ஃபெனிடேட்
மொடாஃபினில்

ஹைப்பர்சோம்னோலென்ஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் கூடுதல் மருந்துகளில் குளோனிடைன், லெவோடோபா, புரோமோக்ரிப்டைன், ஆண்டிடிரஸண்ட்ஸ் மற்றும் மோனோஅமைன் ஆக்சிடேஸ் இன்ஹிபிட்டர்கள் (MAOI கள்) ஆகியவை அடங்கும்.

இவ்வாறான மருந்துகளுக்கு மேலதிகமாக ஒரு நபரின் நல்ல தூக்கத்திற்கு உதவ ஒரு நபரின் தூக்க சுகாதாரத்தில் மாற்றங்களைச் செய்ய மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

இந்த மாற்றங்களின் உதாரணங்கள் பின்வருமாறு:

  • தூங்குவதற்கு முன் தூண்டுதல் பொருட்கள், காஃபின் மற்றும் நிகோடின் போன்றவற்றைத் தவிர்ப்பது.
  • மிதமான அளவில் மட்டுமே மது அருந்துதல். ஆல்கஹால் ஒரு நபருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், அதை அதிகமாக குடிப்பது மோசமான தூக்கத்தினை ஏற்படுத்தும்.
  • நெஞ்செரிச்சல் அல்லது செரிமானத்தை பாதிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது. உதாரணங்கள் அதிக கொழுப்பு கிரீம்கள், வறுத்த உணவுகள், காரமான உணவு, சிட்ரஸ் பழங்கள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் ஆகியவற்றால் செய்யப்பட்ட உணவுகள்.
  • பகல் மற்றும் இரவினை வித்தியாசப்படுத்த காட்சி விளக்கு குறிப்புகளைப் பயன்படுத்துதல். பகலில் ஏராளமான வெளிப்புற வெளிச்சம் மற்றும் தூங்குவதற்கு முன் ஒரு அறையை இருட்டாக மாற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.
  • ஒரு நபர் ஓய்வெடுக்கக் கூடிய ஒரு படுக்கை நேர வழக்கத்தை நிறுவுதல் மற்றும் படுக்கைக்குரிய நேரமானது  அவர்களின் உடலுக்கு சமிக்ஞை செய்ய உதவுகிறது. உதாரணமாக குளிப்பது அல்லது புத்தகம் படிப்பது ஆகியவை அடங்கும்.
  • தூக்க சூழலை வசதியாக மாற்றுவது. அறையை 60 ° F-67 ° F க்குள் குளிர்வித்தல், செல்போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட செயற்கை மூலங்களிலிருந்து வெளிச்சத்தைத் தவிர்ப்பது மற்றும் வசதியான மெத்தையில் தூங்குவது ஆகியவை இதில் அடங்கும்.

தகவல் மூலம் : Medical News Today வலைத்தளத்தின் Hypersomnolence: What you need to know ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டது.

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments