வாழைப்பூ பொரியல்

0
1603

தேவையான பொருட்கள்:

சிறிய வாழைப்பூ – ஒன்று

தேங்காய்த் துருவல் – ஒரு கப்

கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு

மஞ்சள்தூள் – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – ஒன்று

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

Plantain flower fry
Plantain flower fry

செய்முறை:

  • வாழைப்பூவை ஆய்ந்து, நரம்பு நீக்கி நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, ஆறிய உடன் நன்கு பிழிந்துகொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து, வேகவைத்த வாழைப்பூ, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

நன்மைகள்:

  • வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.
  • வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
  • இதை உரிய வகையில் சமைத்துச் சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை, அதாவது, சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.
  • வாழைப்பூ சூப் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் இது ஏற்றது.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க