வாழைத்தண்டு இட்லி (Banana Stem idly)

0
1782

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 2 கப்

நார் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிய இளம் வாழைத்தண்டு – அரை கப்

உப்பு – அரை டீஸ்பூன்

தாளிக்க : நெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)

பெருங்காயத்தூள் – சிறிதளவு

Banana Stem idly
 
Banana Stem idly

செய்முறை:

  • வாணலியில் நெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் புரட்டி ஆறவிடவும் (சூட்டுடன் போட்டால் மாவு கட்டி தட்டும்).
  • இதை இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, வழக்கமான இட்லி போல் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

நன்மைகள்:  வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது. இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க